This Article is From Aug 08, 2019

“ஓ.எம்.ஜி… ஓ.எம்.ஜி…”- நீலகிரியில் வரலாறு காணாத மழை- 'தமிழ்நாடு வெதர்மேன்' ஸ்பெஷல் அப்டேட்!

நீலகிரியின் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 820 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது- வெதர்மேன்

“ஓ.எம்.ஜி… ஓ.எம்.ஜி…”- நீலகிரியில் வரலாறு காணாத மழை- 'தமிழ்நாடு வெதர்மேன்' ஸ்பெஷல் அப்டேட்!

கேரளா, வால்பாறை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, இடுக்கி, நெல்லை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறதாம். இது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், புள்ளி விவரங்களைத் தந்துள்ளார். 

அவர் கொடுத்த தகவல்படி, “ஓ.எம்.ஜி… ஓ.எம்.ஜி… இந்த வார்த்தைதான் எனது மனதில் தோன்றுகிறது. நீலகிரியின் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 820 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தமிழக வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு மழை பெய்ததே இல்லை. பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல கேரளா, வால்பாறை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, இடுக்கி, நெல்லை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. காவேரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளான குடகு மற்றும் வயநாட்டிலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும். காவேரி அணைகளில் கடும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, கேரள, தமிழக மற்றும் கர்நாடக பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 820 மில்லி மீட்டர் மழையும், முகூர்த்தியில் 334 மில்லி மீட்டர் மழையும், மேல் பவானியில் 300 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது” என்று கூறியுள்ளார். 

.