சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு... ராணுவ வீரர்கள் சிக்கியதாக தகவல்!

இது குறித்தான மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன

சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு... ராணுவ வீரர்கள் சிக்கியதாக தகவல்!

சுமார் 18,000 அடிகளுக்கு மேல் இன்று மாலை 3:30 மணி அளவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டிருக்கும் எனப்படுகிறது.

New Delhi:

சியாச்சின் (Siachen) பகுதியில் இருக்கும் ராணுவ இடத்தில் பனிச்சரிவு (avalanche) ஏற்பட்டதால், அங்கிருக்கும் பல ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 8 ராணுவ வீரர்கள்தான் இந்தப் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள், ஏஎன்ஐ-க்கு தகவல் அளித்துள்ளது. 

சுமார் 18,000 அடிகளுக்கு மேல் இன்று மாலை 3:30 மணி அளவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டிருக்கும் எனப்படுகிறது.

இது குறித்தான மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். 

More News