ஏ.டி.எம். மெஷினையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்!! போலீசார் அதிர்ச்சி!

பெரும்பாலான சம்பவங்களில் கொள்ளையர்கள் ஏ.டி.எம். மெஷினை உடைத்து அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்திருப்பார்கள். ஆனால், மெஷினையே தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.டி.எம். மெஷினையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்!! போலீசார் அதிர்ச்சி!

கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Kaushambi:

கொள்ளையடிப்பதற்காக ஏ.டி.எம். மெஷினையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் அதிலிருந்த பணம் ரூ. 12 லட்சத்தை எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்த இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் காலியான ஏ.டி.எம். மெஷின் கிடைத்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டம் சைனி பகுதியில்தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. தூக்கிச் செல்லப்பட்ட மெஷின் பரோடா வங்கிக்கு சொந்தமானதாகும். 

பெரும்பாலான சம்பவங்களில் கொள்ளையர்கள் ஏ.டி.எம். மெஷினை உடைத்து அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்திருப்பார்கள். ஆனால், மெஷினையே தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக வங்கி மேலாளர் அரவிந்த் குமார் அளித்துள்ள புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
More News