This Article is From Dec 12, 2019

அசாம் மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்த மோடி!! - கலாய்த்த காங்கிரஸ்!!

Citizenship (Amendment) Bill: அசாம் மக்கள் "கவலைப்பட ஒன்றுமில்லை" என்றும் "தங்கள் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது" என்றும் இன்று காலை பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அசாம் மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்த மோடி!! - கலாய்த்த காங்கிரஸ்!!

அசாம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

New Delhi:

குடியிருப்பு திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்ததை காங்கிரஸ் கடுமையாக கலாய்த்துள்ளது. 

அசாம் மக்கள் "கவலைப்பட ஒன்றுமில்லை" என்றும் "தங்கள் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது" என்றும் இன்று காலை பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த பதிவை சுட்டிகாட்டி காங்கிஸ் கட்சியினர் அசாம் மாநிலத்தில் இணைய சேவை இல்லை என்பதை உங்களுக்கு சுட்டிகாட்டுகிறோம் என்று தெரிவித்துள்ளனர். 


இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, குடியுரிமை மசோதா குறித்து அசாம் மாநிலத்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகள் கவலை கொள்ள வேண்டாம். 

உங்களின் உரிமைகள், தனித்துவமான அடையாளம், அழகான கலாசாரத்தை யாரும் பறிக்க முடியாது. அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6ன் படி மாநில மக்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் நில உரிமைகளை அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்க மத்திய அரசும், நானும் முற்றிலும் கடமைப்பட்டுள்ளோம் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். 
 


பிரதமர் நரேந்திர மோடியின இந்த ட்வீட்டர் பதிவை குறிப்பிட்டு அதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், அசாமில் உள்ள எங்கள் சகோதர, சகோதரிகளால் உங்களின் நம்பிக்கை தகவலை அறிந்துகொள்ள முடியாது. மோடிஜி அங்கு இணைய சேவை தடை செய்யபட்டுள்ளதை நீங்கள் மறந்துவிட்டிர்கள் என்று காங்கிரஸ் கலாய்த்து பதிலடி கொடுத்திருந்தது. 

அசாம் மாநிலத்தில் போராட்டம் தீவிரமடைந்த கவுஹாத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றியுள்ளது.

.