This Article is From Jun 22, 2018

இரு சக்கர வாகனத்தில் சென்ற காதல் ஜோடியை, அடித்து திருமணம் செய்ய வற்புறுத்திய கிராம மக்கள்

அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காதல் ஜோடியை வழி மறித்திருக்கின்றனர் கிராம மக்களில் ஒரு பகுதியினர்

இரு சக்கர வாகனத்தில் சென்ற காதல் ஜோடியை, அடித்து திருமணம் செய்ய வற்புறுத்திய கிராம மக்கள்

In a video the man holding a staff can be seen threatening the couple, the woman in particular.

Guwahati: கௌஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் காதல் ஜோடி சென்றதை கலாச்சார சீர்கேடு என சொல்லி, கிராம மக்கள் அடித்து திருமணம் செய்ய வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

செவ்வாய்க்கிழமை அன்று அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காதல் ஜோடியை வழி மறித்திருக்கின்றனர் கிராம மக்களில் ஒரு பகுதியினர். 

சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் இது சம்பந்தப்பட்ட ஒரு வீடியோவை பார்க்கையில், காதல் ஜோடியை ஒருவர் மிரட்டுவது தெரிகிறது. மக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கையில், இன்னொரு ஆள் ஒரு மூங்கில் குச்சியை எடுத்து வந்து அப்பெண்ணை காட்டுமிராண்டித்தனமாக அடிப்பது தெரிகிறது. 

“இச்சம்பவம் குறித்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லையென்றாலும் கூட, சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து இருவரை கைது செய்துள்ளோம். மற்றவர்களையும் விரைவில் கைது செய்வோம்” என காவல் துறை இயக்குனர் குலாதார் சைக்கியா கூறியுள்ளார்.     
 
.