அசோக் லேலண்டில், எல்க்ட்ரிக் வாகன தயாரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

எலக்ட்ரிக்கில் தாழ்தள மாநகரப் பேருந்துகள், எல்.சி.விக்கள், தயாரிக்க இருப்பதாக அசோக் லேலண்டின் நிர்வாக இயக்குனர் வினோத் கே. தாசரி தெரிவித்துள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
அசோக் லேலண்டில், எல்க்ட்ரிக் வாகன தயாரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

அசோக் லெய்லாண்ட் நிறுவனம், புதிதாக, எல்க்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் உயர் தர உற்பத்தி நிலையத்தை எண்ணூரில் தொடங்கியுள்ளது. இன்று நிறுவனத்தின் 70-ம் ஆண்டு விழாவின், இந்த எல்க்ட்ரிக் வாகன தயாரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.

அசோக் லெய்லாண்ட் தொழிற்சாலைக்குள், மற்றொரு ஸ்டார்ட் அப் தொழிற்சாலையாக இந்த எல்க்ட்ரிக் வாகன உற்பத்தி நிலையம் உருவாகியுள்ளது. வடிவமைப்பு, ப்ரோடோபைட் உருவாக்கம், சோதனை ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் செய்யும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு, இன்ஜினியரிங், ப்ரோடோடைபிங், மோட்டார் வடிவமைப்பு, பேட்டரி மாடியூல்கள், பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆய்வகமும் இங்கு உள்ளது. வருங்காலத்தில் எல்க்ட்ரிக் கார்களுக்கான தேவையை மனதில் வைத்து இந்த உற்பத்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளதாக அசோக் லெய்லாண்டின் நிர்வாக இயக்குனர் வினோத் கே. தாசரி தெரிவித்துள்ளார்.எலக்ட்ரிக்கில் தாழ்தள மாநகரப் பேருந்துகள், எல்.சி.விக்கள், மின்சார சேவை வழங்கும் இயந்திரங்களை தயாரிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“வர்த்தக வாகன தயாரிப்பில் பல புது முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதோடு, இப்போது திறக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிலையம் மூலம், வர்த்தக பயன்பாட்டுக்கான வாகனங்களை தயாரிக்க இருக்கிறோம்" என, எல்க்ட்ரிக் வாகன தயாரிப்பு துறை தலைவர், கார்த்திக் ஆத்மநாதன தெரிவித்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................