This Article is From Feb 15, 2019

ராணுவ வீரர்கள் உடல்களுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி அஞ்சலி!

புல்வாமா தீவிரவாத தாக்குதல்: உயிரிழந்த துணை ராணுவ வீர ர்களின் உடல்கள் c-130 விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரவர் சொந்த ஊருக்கு நாளை அனுப்பி வைக்கப்படுகிறது

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

New Delhi:

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் மீண்டும் பணிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு கார் ஒன்று துணை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்துகளில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதியது. இதில், அந்த பேருந்து முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன. இதில் துணை ராணுவ வீரர்கள் 44 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர்.

knnuldl8

இந்நிலையில் இன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பட்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அங்கிருந்து 40 வீரர்களின் உடல்களும் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. வீரர்களின் உடல்களை சுமந்து வந்த விமானம் இன்றிரவு சுமார் 8 மணியளவில் டெல்லியில் ராணுவத்துக்கு சொந்தமான பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

.