கர்நாடகாவில் 2 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்!

ஆபரேஷன் லோட்டஸ்' என்ற பெயரில் நடைபெறும் இந்த சதியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் சிக்கியிருப்பதாக கர்நாடக காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்து வந்தது

 Share
EMAIL
PRINT
COMMENTS
கர்நாடகாவில் 2 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்!

காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு 116க்கும் குறைவான எம்.எல்.ஏக்களே உள்ளனர்.


Bengaluru: 

ஹைலைட்ஸ்

  1. ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் அறிவிப்பு.
  2. கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கான ஆதரவு எண்ணிக்கை 117ஆக குறைவு.
  3. கர்நாடக பேரவையில் பெரும்பான்மைக்கு 113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏக்களான எச்.நாகேஷ், ஆர்.சங்கர் ஆகியோர் வாபஸ் பெற்றுள்ளனர். இதைத்த்தொடர்ந்து தங்களது வாபஸ் கடிதத்தை ஆளுநருக்கு இருவரும் அனுப்பியுள்ளனர்.

இதனால், கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கான ஆதரவு எண்ணிக்கை 117ஆக குறைந்துள்ளது. 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக பேரவையில் பெரும்பான்மைக்கு 113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அவசியம் என்ற நிலையில் தற்போது, குமாரசாமி தலைமயிலான அரசுக்கு 117 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுயேச்சை எம்.எல்.ஏ. எச்.நாகேஷ் கூறியதாவது, கூட்டணி கட்சிகளிடையே புரிதல் இல்லாததால் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். கூட்டணியை விட நிலைத்த அரசால்தான் சிறப்பான முறையில் செயலாற்ற முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. ஆர்.சங்கர், திறமையான அரசு தேவை என்பதால் மஜத கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றேன் என்று கூறியுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................