This Article is From Jun 29, 2020

டெல்லியில் பிளாஸ்மா வங்கி: கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தானம் அளிக்க வலியுறுத்தல்!

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, டெல்லி அரசு பிளாஸ்மா வங்கியை அமைக்க உள்ளது. அதனால், கொரோனா நோயாளிகளை காப்பதற்கு, மக்கள் பிளாஸ்மாவை தானம் செய்து உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் பிளாஸ்மா வங்கி: கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தானம் அளிக்க வலியுறுத்தல்!

ஹைலைட்ஸ்

  • Arvind Kejriwal said transport to plasma bank will be arranged for donors
  • Plasma bank to be at Institute of Liver and Biliary Sciences in Delhi
  • Therapy involves plasma transfusion from convalescent COVID-19 patient
New Delhi:

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட டெல்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதற்காக கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மற்ற நோயாளிகளுக்கு உதவும் வகையில் பிளாஸ்மாவை தானம் அளிக்க முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், பிளாஸ்மா தானம் அளிக்க முன்வருபவர்களுக்கு பிளாஸ்மா வங்கி வருவதற்கு மாநில அரசு போக்குவரத்துகளையும் ஏற்பாடு செய்து தரும் என்று அவர் உறுதி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, டெல்லி அரசு பிளாஸ்மா வங்கியை அமைக்க உள்ளது. அதனால், கொரோனா நோயாளிகளை காப்பதற்கு, மக்கள் பிளாஸ்மாவை தானம் செய்து உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அடுத்த இரண்டு நாட்களில் டெல்லியில் பிளாஸ்மா வங்கி செயல்பட தொடங்கும். பிளாஸ்மா தெரபிக்காக மருத்துவ சோதனைகளை மாநில அரசு இதுவரை மேற்கொண்டது. அதன் முடிவுகளும் பலன் அளிப்பதாக உள்ளது. 

அதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், அனைவரும் முன்வந்து உயிர்களை காப்பாற்றுங்கள். உங்களால் உயிர்களை காப்பாற்ற முடியும் என்பது அரிதானது. இது இறைவனின் உண்மையான சேவை என்று அவர் தெரிவித்துள்ளார். 

தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்சில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்சஸ் நிறுவனத்தில் இருக்கும் பிளாஸ்மா வங்கி, பிளாஸ்மா நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு நோக்கத்திற்காக உதவும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

நீங்கள் தானம் அளிக்க பிளாஸ்மா வங்கிக்கு சென்றால், எந்த ஆபத்தும் இல்லை. நீங்கள் அங்கு சென்று நன்கொடை வழங்குவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் ஏற்பாடு செய்வோம். இந்த அமைப்புக்கான எண்களை சில நாட்களில் அறிவிப்போம்" என்றார்.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லியில், நேற்று மட்டும் புதிதாக 2,889 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 83,077ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், டெல்லியில் தான் முதன்முறையாக பிளாஸ்மா தெரபி வெற்றிகரமாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், 49 வயது நபர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வென்டிலேட்டர் துணையில் இருந்த நிலையில், அவருக்கு பிளாஸ்மா தெரபி மேற்கொள்ளப்பட்டது. 

.