டெல்லி சட்டமன்ற தேர்தல்: இலவச மின்சாரம் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் 10 உத்தரவாதங்கள்!

Delhi Election: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது. இந்தமுறை 70 இடங்களையும் கைப்பற்ற அக்கட்சி திட்டமிட்டு வருகிறது.

டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

New Delhi:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு 10-உத்தரவாதங்களை வழங்கியுள்ளார். அதில், இலவச மின்சாரம், 24மணி நேர குடிநீர் வசதி, மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

மேலும், குடிசை வாசிகளுக்கு வீட்டு வசதி, சுத்தமான சுற்றுச்சூழல் உள்ளிட்ட அம்சங்களை ஏற்படுத்தி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, இது எங்கள் தேர்தல் அறிக்கை அல்ல. அதற்கு இரண்டு மடங்கு மேலானது. இவை டெல்லி மக்களை பாதிக்கும் பிரச்சினைகள். இந்த உத்தரவாதங்கள் அவை குறித்தே உள்ளது.

200 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் மற்றும் 20,000 லிட்டர் தண்ணீர் இலவசம் என்று அறிவித்துள்ளார். இந்த இரண்டு சிக்கல்களும் அந்த கட்சிக்கு பரந்த ஆதரவைக் பெற்றுக் கொடுக்கும் என ஆம் ஆத்மி நம்புகிறது.

மேலும், நகரத்தில் அரசால் நடத்தப்படும் பள்ளியில் மறுசீரமைப்பு செய்வது வெற்றிகரமான முன்னெடுப்பாக இருக்கும் என்று ஆம் ஆத்மி கட்சி நம்புகிறது.

Newsbeep

இந்த முறை, ஒவ்வொரு குளிர்காலத்திலும் நகரத்தை "எரிவாயு அறை" என்று அழைக்கும் சுழல் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, "300 சதவிகிதம்" மாசுபாட்டைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவாத அட்டை முன்னோக்கி செல்லும் பாதையையும் குறிக்கிறது, 2 கோடி மரங்களை நடவு செய்தல். இதற்கு இணையாக, யமுனாவை சுத்தம் செய்யவும் கட்சி திட்டமிட்டுள்ளது.

கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களை கைப்பற்றியது. இந்தமுறை 70 இடங்களையும் கைப்பற்ற அக்கட்சி திட்டமிட்டு வருகிறது. ஆம் ஆத்மி ஏற்கனவே 70 இடங்களுக்குமான வேட்பாளர்களை அறிவித்துள்ளது, இதில் 46 நடப்பு எம்.எல்.ஏக்கள் மற்றும் 24 புதிய முகங்களை அறிவித்துள்ளது.