கொரோனா அச்சுறுத்தல் : டெல்லியில் 50-பேருக்கும் அதிகமானோர் கூட தடை விதிப்பு!!

டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் குணம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

கட்டாய மருத்துவ முகாமுக்காக 3 தனியார் ஓட்டல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை பணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது
  • இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் ஒருவர் டெல்லியை சேர்ந்தவர்
  • திருமண நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்குமாறு கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்
New Delhi:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் 50-க்கும் அதிகமானோர் கூட தடை விதித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். நைட் கிளப்புகள், உடற்பயிற்சி கூடங்கள் மார்ச் 31-ம்தேதி வரை அடைக்கப்பட்டிருக்கும். 

முடிந்த வரைக்கும் திருமண நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்குமாறு டெல்லி மக்களை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், '50 பேருக்கும் அதிகமானோர் கூடும் அனைத்து மத, சமூக, கலாச்சார நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். திருமண நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு, மக்கள் அதனை விருப்பத்துடன் ஒத்தி வைத்துக் கொள்ளலாம் என்று பதில் அளித்தார் கெஜ்ரிவால்.

கட்டாய மருத்துவ முகாமுக்காக 3 தனியார் ஓட்டல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனைப் பணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் முதற்கொண்டு பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. 

டெல்லியில் மொத்தம் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. அவர்களில் 2 பேர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பி விட்டனர். ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 16 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். டெல்லியைத் தவிர்த்து கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 

Listen to the latest songs, only on JioSaavn.com