புகையால் திணறும் டெல்லி!! பள்ளி மாணவ மாணவிகளுக்கு 50 லட்சம் மாஸ்க்குகள் விநியோகம்!

அண்டை மாநிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் புகை சூழ்ந்து காணப்படுகிறது. பள்ளிக் குழந்தைகள் முகத்தில் மூக்கை மறைக்கும் மாஸ்க்குகளை அணிந்து கொண்டு சென்றனர்.

புகையால் திணறும் டெல்லி!! பள்ளி மாணவ மாணவிகளுக்கு 50 லட்சம் மாஸ்க்குகள் விநியோகம்!

கட்டுமானப் பணிகள் நவம்பர் 5-ம்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

New Delhi:

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் திணறி வருகின்றனர். மூச்சுத் திணறலில் இருந்து தப்பிப்பதற்காக 50 லட்சம் மாஸ்க்குகளை டெல்லி அரசு பள்ளி மாணவ மாணவிகளிடம் விநியோகித்து வருகிறது.  

கட்டுமானப் பணிகளால் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், நவம்பர் 5-ம்தேதி வரைக்கும் டெல்லியில் கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதற்கு மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்திருக்கிறது. 

டெல்லியைப் பொறுத்தளவில் இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வியாழக்கிழமை முதல் புகை மூட்டம் காணப்படுகிறது. மிக மோசம் என்ற நிலையில் காற்று மாசு இருந்த சூழலில், தற்போது அவசர நிலைப் பிரிவுக்கு காற்று மாசுபாடு தீவிரம் அடைந்திருக்கிறது. 
 

.

குளிர்காலத்தின்போது, பட்டாசுகளை யாரும் வெடிக்க வேண்டாம் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், தீபாவளியன்று பட்டாசுகள் பல இடங்களில் வெடிக்கப்பட்டன. 

டெல்லி காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங்களான அரியானா மற்றும் பஞ்சாபில் இருந்து வெளியேற்றப்படும் புகையே முக்கிய காரணம். அங்குள்ள விவசாயிகள் விவசாய கழிவுகளை எரித்து அவற்றை அழிக்கின்றனர். இதனால் எழும் புகை டெல்லியை சூழ்ந்து கொண்டு மக்களை திணறடிக்கிறது. இதனுடன் வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, கட்டிடங்களை கட்டும்போது எழும் மாசு உள்ளிட்டவையும் சேர்ந்து கொண்டு காற்று மாசை அதிகரிக்கின்றன. 

இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'டெல்லி காற்று மாசுபாட்டு பிரச்னைக்கு அரியானா, பஞ்சாப் மாநிலங்களை மட்டுமே கெஜ்ரிவால் குறை சொல்லக்கூடாது. டெல்லியைச் சுற்றிலும் 5 மாநிலங்களில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலை கழிவுகள் வெளியேறுகின்றனர். அவற்றின் மீது டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

உலகில் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக டெல்லி விளங்குகிறது. ஒவ்வொரு முறை குளிர்காலம் வரும்போதும் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் வெளியேறும் புகை, கோடிக்கணக்கான தீபாவளி பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் புகை உள்ளிட்டவை டெல்லி மேகங்களை சிமென்ட் வண்ணத்திற்கு மாற்றி விடுகின்றன. 

More News