அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது

Arun Jaitley Dies: 2.30 மணிக்குள் ஜெட்லியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு யமுனா நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதிக்கு தகனத்துக்காக எடுத்துச் செல்லப்படும். அங்கு 2.30மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

ஏறக்குறைய 8 கி.மீ தொலைவுக்கு ஜெட்லியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. கட்சி பாகுபாடின்றி பலரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
  2. நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெட்லி உயிரிழந்தார்
  3. குடியரசு தலைவர், அமித் ஷா, சோனியாகாந்தி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மக்களின் அஞ்சலிக்காக இன்று காலை வைக்கப்பட்டது.

இன்று பிற்பகலில் முழு அரசு மரியாதையுடன் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்படுகிறது. 

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் தலைவர் கோவிந்த், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் தெற்கு டெல்லியில் உள்ள அவரின் இல்லத்தில் நேரில் சென்று உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அருண் ஜெட்லியி உடல் இன்று காலை அவரின் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பாஜக தலைமை அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு காலை 10.30 மணி முதல் நண்பகல் ஒரு மணிவரை கட்சித் தொண்டர்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதன்பின் 2.30 மணிக்குள் ஜெட்லியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு யமுனா நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதிக்கு தகனத்துக்காக எடுத்துச் செல்லப்படும். அங்கு 2.30மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கும். ஏறக்குறைய 8 கி.மீ தொலைவுக்கு ஜெட்லியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................