This Article is From May 29, 2019

’புதிய அமைச்சரவையில் தொடர விரும்பவில்லை’ பிரதமருக்கு அருண் ஜெட்லி கடிதம்!

கடந்த சில நாட்களாக அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும்நிலையில், அதிகாரிகளுடம் பல்வேறு ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றது போன்ற புகைப்படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பிரதமருக்கு கடிதம்.

New Delhi:

புதிதாக அமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் மீண்டும் தொடர விரும்பவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். புதிய மத்திய அமைச்சரவை நாளை பதவியேற்கு உள்ள நிலையில் அருண் ஜெட்லி இந்த கடிதத்தை எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி எழுதியுள்ள கடிதத்தின் நகலை அவரது டிவிட்டரிலும் வெளியிட்டுள்ளார். அதில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு புதிய அமைச்சரவையில் தான் தொடர விரும்பவில்லை என்றும், தொடர்ந்து ஒய்வெடுக்க விரும்புவதால் தனக்கு எந்த பொறுப்புகளும் வழங்க வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், கடந்த 18 மாதங்களாக தீவிர உடல்நலக்குறைவால் தான் அவதிப்பட்டு வருவதால், மருத்துவர்கள் தன்னை தொடர் ஒய்வில் இருக்க சொல்லி வலியுறுத்துகின்றனர். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்பு பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்கு புறப்படும்போது, அவரிடம் இதனை தெரிவித்திருந்தேன். தேர்தல் பிரச்சாரத்தின் போது எனக்கு நியமிக்கப்பட்ட பொறுப்புகளில் இருந்து என்னால் விடுவித்துக்கொள்ள முடிந்தாலும், அதனை நான் மேற்கொண்டேன்.

இனி வரும் காலங்களில் எனது அனைத்து பொறுப்புகளிருந்தும் சிறிது காலம், விலகி இருக்க விரும்புகிறேன். இது எனது சிகிச்சையிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். "

erv18nd8

மேலும், அவர் அரசு அல்லது கட்சிக்கு அதிகாரப்பூர்வமற்ற வகையில் தனது ஆதரவை அளிக்க நிறைய நேரம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

cb85vv7

கடந்த சில நாட்களாக அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும்நிலையில், அதிகாரிகளுடம் பல்வேறு ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றது போன்ற புகைப்படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

.