This Article is From Jun 20, 2018

தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவி விலகினார்

தலைமை பொருளாதார ஆலோசகர் திரு. அரவிந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்தார்

ஹைலைட்ஸ்

  • குடும்ப பொறுப்புகள் உள்ளதால், பதவியில் இருந்து விலகினார்
  • கடந்த 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்று, பதவி காலம் நீட்டிக்கப்பட்டார்
  • அமெரிக்கா செல்ல இருப்பதால் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்தார்
New Delhi: புதுடில்லி: தலைமை பொருளாதார ஆலோசகர் திரு. அரவிந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்கா செல்ல இருப்பதால் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்ததாக அமைச்சர் அருன் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். மே 2019 ஆம் தேதி அவரது பதிவு காலம் கொடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் முன்னேறி வரும் அமைச்சர் அருண் ஜெட்லியை, வீடியோ கான்பரென்சிங் மூலம் அரவிந்த் சுப்ரமணியன் சந்தித்து ராஜினாமா முடிவை கூறியுள்ளார். “தனிப்பட்ட முறையில் அவர் எடுத்த முடிவு, மிக முக்கியமான பணிகளுக்காக ஓய்வெடுக்க போவதாக குறிப்பிட்டார்” என அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு முன் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், ஆர்பிஐ கவர்னராக பொறுப்பேற்றதால், கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி அரவிந்த் சுப்ரமணியன் பொறுப்பேற்றார்.

“மூன்று ஆண்டு கால பதவி காலம் முடிந்த பின்னரும், அவருடைய பதவி காலத்தை நீட்டிக்கப்பட்டது. குடும்ப வேலைகளுக்கும், பணிகளுக்கும் நடுவில் இருந்த போதும், தன் பணியில் முழு ஈடுபாட்டுடன் இருந்ததாக அவர் தெரிவிப்பார்” என அருண் ஜெட்லி தெரிவித்தார்.

“தினமும் எனது அறைக்குள் அவர் பல முறை வந்து செல்வார். பல முக்கியமான செய்திகளை குறித்து பேச வருவார். அவருடைய பிரிவை நான் நினைத்து பார்ப்பேன்” என்று கூறி, இறுதியில், “நன்றி அரவிந்த்” என தன முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்,

டில்லி புனித ஸ்டீபன் கல்லூரி, இந்திய மேலான்மை பல்கலைகழகம், அகமதாபாத், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தன் கல்வி படிப்பை பெற்றுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக செயல்படுவதாக கூறி, அரவிந்த் சுப்ரமணியனை பதவி விலகக்கோரி, பாஜக கட்சியின் சட்ட வல்லுநர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து பேசி வந்தார். எனினும், அமைச்சர் அருண் ஜெட்லி அரவிந்துக்கு ஆதரவாக பேசி பதவி நீட்டிப்பு செய்தார்.

தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு வரப்போகும் அடுத்தவர் குறித்த விவரங்களை கேட்டதற்கு, “அதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படும். அந்த பதவியை பெற தகுதி பெற்றிருக்க வேண்டும்” என்றார் அமைச்சர் அருண் ஜெட்லி.
.