காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு!!

மாநிலங்களவையில் மறுசீரமைப்பு ஆதரவாக 125 பேரும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு!!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 35ஏ மற்றும் 370 பிரிவுகள் ரத்து

New Delhi: 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறந்த அந்தஸ்தான சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அறிவித்தார். தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு கொண்டுவரப்பட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து, கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியது. இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் விவாதம் தொடங்கியுள்ளது. மாநிலங்களவையில் மறுசீரமைப்பு ஆதரவாக 125 பேரும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர். 
 

Here are the HIGHLIGHTS from Jammu and Kashmir, and Lok Sabha, where the resolution to revoke Article 370 and bifurcation of J&K was tabled:
Aug 06, 2019
19:48 (IST)
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. 
Aug 06, 2019
19:43 (IST)
ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.
Aug 06, 2019
19:40 (IST)
மக்களவையை தேதி குறிப்படாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார். கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாகவும் சபாநாயகர் அறிவித்திருக்கிறார். 
Aug 06, 2019
19:38 (IST)
சட்ட சபை இல்லாத யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதி மாறுகிறது. 
Aug 06, 2019
19:28 (IST)
மக்களவையில் காஷ்மீரை இரண்டாக பிரிக்கும் மசோதாவுக்கு ஆதரவாக 361 வாக்குகளும், எதிராக 66 வாக்குகளும் பதிவாகின.
Aug 06, 2019
19:28 (IST)
காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது
Aug 06, 2019
19:01 (IST)
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் அரசியலமைப்பு சட்ட பிரிவு 370-யை  ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
Aug 06, 2019
18:52 (IST)
''5 ஆண்டுகளில் காஷ்மீர் மாபெரும் வளர்ச்சி அடையும். அதன் பின்னர்தான் சிறப்பு அந்தஸ்து வளர்ச்சிக்கு எவ்வளவு தடையாக இருந்தது என்பது தெரியவரும்'' - அமித் ஷா
Aug 06, 2019
18:47 (IST)
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சரியா அல்லது தவறா என்பதை வரலாறு தீர்மானிக்கும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
Aug 06, 2019
18:21 (IST)
ஒற்றுமை என்ற பெயரில் மத்திய பாஜக அரசு பிரிவினையை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றம்சாட்டியுள்ளார். 
Aug 06, 2019
18:20 (IST)
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய இந்தியாவின் நடவடிக்கைக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு தெரிவித்துள்ளது. 
Aug 06, 2019
15:16 (IST)
Aug 06, 2019
13:06 (IST)
Aug 06, 2019
12:23 (IST)
Aug 06, 2019
11:52 (IST)

அரசியல் நகர்வு அல்ல:  காங்கிரஸூக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரன்ஜன் சவுத்ரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமித்ஷா, சட்டப்பிரிவு 370 நீக்கம் என்பது அரசியல் நகர்வு அல்ல, ஒட்டு மொத்த நாட்டிற்கும் சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு ஆகிய இரண்டும் இதைச் செய்ய அனுமதிக்கின்றன.

"நாங்கள் ஜம்மு-காஷ்மீர் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும், அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் அடங்கும் என்பதை நான் முற்றிலும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். முழு ஜம்மு-காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று அவர் கூறினார். 

Aug 06, 2019
11:44 (IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இரண்டு மசோதாவையும் தாக்கல் செய்தார். 

மசோதா 1 - காஷ்மீரை மறுசீரமைக்கும் வகையில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுகிறது.  

மசோதா 2 - ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது, - ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும். 
No more content

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................