“இந்து பாகிஸ்தான்” என விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவருக்கு கைது வாரன்ட்- கோர்ட் அதிரடி!

கொல்கத்தா நகரத்தில் உள்ள மாஜிஸ்த்ரேட் நீதிமன்றதில் வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
“இந்து பாகிஸ்தான்” என விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவருக்கு கைது வாரன்ட்- கோர்ட் அதிரடி!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தரூர், “2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் பாஜக வெற்றி பெற்றால் இந்து பாகிஸ்தான் உருவாக்கப்படும்” என்று பரபரப்பாக பேசினார். 

Kolkata: 

ஹைலைட்ஸ்

  1. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொதுக் கூட்டத்தில் பேசினார் சசி தரூர்
  2. அதில், "2019-ல் பாஜக வென்றால் இந்து பாகிஸ்தான் உருவாக்கப்படும்" என்றார்
  3. கொல்கத்தா நீதிமன்றம் இந்த பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது

காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான சசி தரூருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது கொல்கத்தா நீதிமன்றம். அவரின் ‘இந்து பாகிஸ்தான்' விமர்சனத்துக்கு எதிராக தொரடப்பட்ட வழக்கில்தான் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தரூர், “2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் பாஜக வெற்றி பெற்றால் இந்து பாகிஸ்தான் உருவாக்கப்படும்” என்று பரபரப்பாக பேசினார். 

திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய தரூர், “பாஜக ஒரு புதிய சட்ட சாசனத்தையே உருவாக்கும். அது பாகிஸ்தான் போல ஒரு இந்தியாவைத்தான் உருவாக்கும். சிறுபான்மையினரின் உரிமைகள் அதில் பறிக்கப்படும். நமது ஜனநாயகப் பூர்வமான சட்ட சாசனம் தூக்கியெறியப்படும்.

அவர்கள் உருவாக்கும் புதிய சட்ட சாசனத்தில் இந்து ராஷ்டிராவின் கொள்கைகள்தான் தூக்கிப் பிடிக்கப்படும். சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் சம உரிமையை அது மறுக்கும். இந்து பாகிஸ்தான் உருவாகும். அது காந்தி, நேரு, படேல், மவுலானா அசாத் கனவு கண்ட இந்தியாவாக இருக்காது” என்று பேசினார். 

இதற்கு எதிராக கொல்கத்தா நகரத்தில் உள்ள மாஜிஸ்த்ரேட் நீதிமன்றதில் வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் தற்போது பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................