This Article is From Jun 26, 2018

நீதிமன்றத்துக்குள் கைது நடவடிக்கை கண்டனத்திற்குரியது : தலைமை நீதிபதி

15 நிமிடங்களுக்கு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, நீதிமன்ற அறைக்குள் வந்து கைது செய்யும் முறையை அனுமதிக்க முடியாது என்று கண்டித்து பேசினார்

நீதிமன்றத்துக்குள் கைது நடவடிக்கை கண்டனத்திற்குரியது : தலைமை நீதிபதி

திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வந்தவரை கட்டாயமாக நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து கைது செய்த காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். நீதிமன்றத்துக்குள் முறையற்று கைது செய்வது உச்ச நீதிமன்ற விதிமுறைகளுக்குள் இல்லை என குறிப்பிட்டார்.

அரசு வழக்கறிஞர் டி.என் ராஜகோபாலன் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சரணடைய வந்த நபரை நீதிமன்ற வளாகத்திற்குள் வந்து கைது செய்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 15 நிமிடங்களுக்கு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, நீதிமன்ற அறைக்குள் வந்து கைது செய்யும் முறையை அனுமதிக்க முடியாது என்று கண்டித்து பேசினார். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைப்பெறாமல் இருக்க, காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்

கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர் சிட்டிபாபு கொலை வழக்கில் 29 வயது சந்தோஷ் உள்ளிட்ட சிலர் குற்றஞ்சாட்டப்பட்டனர். காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த சந்தோஷ், கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கறிஞர் உடன் வந்த சந்தோஷை, கோவை சிங்காநல்லூர் பகுதி காவல் துறையினர் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து கைது செய்தனர். இது தொடர்பாக, திருப்பூர் வழக்கறிஞர் சங்கம், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பியது. சரணடைய வந்தவரை கட்டாயமாக கைது செய்வது குற்ற செயல் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.