‘பொங்கல் கழிச்சு நான் ரோட்டுக்கு வரணுமா..?’- அற்புதம் அம்மாள் கண்ணீர்

சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் சமூக வலைதளத்தில் கணக்கு ஆரம்பித்த அற்புதம் அம்மாள், எழுவர் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘பொங்கல் கழிச்சு நான் ரோட்டுக்கு வரணுமா..?’- அற்புதம் அம்மாள் கண்ணீர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராடியும் வலியுறுத்தியும் வருகின்றனர்.

எழுவர் விடுதலை குறித்து, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். அவரின் இந்த செயலற்றத் தன்மைக்கு பல தரப்பினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் புரோகித்தை, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், சில வாரங்களுக்கு முன்னர் நேரில் சென்று பார்த்து மனு கொடுத்தார். சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த அற்புதம் அம்மாள், ‘ஆளுநர் நீதியின் பக்கம் நின்று, நல்ல முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்றார். அந்த சந்திப்பு நடந்தும் பல மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், எழுவர் விடுதலை குறித்து இதுவரை எந்தவொரு அதிகார பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் சமூக வலைதளத்தில் கணக்கு ஆரம்பித்த அற்புதம் அம்மாள், எழுவர் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பொங்கல் வர இன்னும் சில நாட்களே மீதம் இருக்கும் நிலையில், தற்போது உருக்கமான ஒரு பதிவை அவர் பகிர்ந்துள்ளார்.

‘என் பொண்ணுங்க அறிவு பொங்கலுக்கு வருவான்னு காத்திருக்காங்க. தமிழகமெங்கும் அழைச்சு கேட்குறாங்க. நம்பிக்கையா இருக்கேன். இது புது பொங்கலா? 28வது பொங்கலானு தெரியல? பொங்கலுக்கு வீட்டுக்கு வருவானா. பொங்கல் கழிச்சு நான் ரோட்டுக்கு வரனுமான்னு வர்ற நாட்கள் முடிவு செய்யும்' என்று கண்ணீர் விடாத குறையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அற்புதம் அம்மாள்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................