This Article is From Dec 17, 2018

“நீதி வெல்வதெப்போ…?”- கவிதை எழுதி உருகிய அற்புதம் அம்மாள்

எழுவர் விடுதலை குறித்து, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்

“நீதி வெல்வதெப்போ…?”- கவிதை எழுதி உருகிய அற்புதம் அம்மாள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராடியும் வலியுறுத்தியும் வருகின்றனர்.

எழுவர் விடுதலை குறித்து, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். அவரின் இந்த செயலற்றத் தன்மைக்கு பல தரப்பினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் புரோகித்தை, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், நேரில் சென்று பார்த்து மனு கொடுத்தார். சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த அற்புதம் அம்மாள், ‘ஆளுநர் நீதியின் பக்கம் நின்று, நல்ல முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்றார். அந்த சந்திப்பு நடந்தும் பல மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், எழுவர் விடுதலை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் கணக்குத் தொடங்கிய அற்புதம் அம்மாள், தனது மகன் பேரறிவாளன் மற்றும் கணவர் குயில்தாசன் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

அந்தக் கவிதை பின் வருமாறு,

“நீதி வெல்வதெப்போ...?

விடுப்பில் வந்தான் "மகிழ்ந்தோம்"

விடைபெற்று சென்றான் "உடைந்தோம்"

வழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம்

அவன் "விடுதலைக்கு!"

.