This Article is From Sep 19, 2019

''புல்லட் புரூஃப் ஆடைகளை 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது இந்தியா'' - மோடி பெருமிதம்!!

பாதுகாப்பு படைக்கு போதிய உபகரணங்களை முந்தைய காங்கிரஸ் அரசு வழங்கவில்லை என்றும், அதனை மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.

''புல்லட் புரூஃப் ஆடைகளை 100  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது இந்தியா'' - மோடி பெருமிதம்!!

இந்தியாவை பொருத்தளவில் தேசப் பாதுகாப்பு மிக முக்கியம் என்கிறார் மோடி.

Nashik:

இந்தியாவில் தயாரிக்கப்படும் தோட்டா துளைக்காத ஆடைகள் (Bullet Proof Jackets) இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்பட்டது போக 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது-

இன்றைக்கு தோட்டா துளைக்காத ஆடைகளை நாமே தயாரித்து வருகிறோம். இந்திய வீரர்களின் தேவைக்குப் போக மற்ற ஆடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

இரண்டு மிக சக்தி மிக்க ஹெலிகாப்டர்களை நமது பாதுகாப்பு படையில் இணைத்துள்ளோம். மிக விரைவில் ரபேல் விமானங்கள் விமானப்படையில் இணைந்து விடும். முப்படைகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைக்கும் வகையில் தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார். 

2009-ல் 1.86 லட்சம் பாதுகாப்பு படை வீரர்களுக்கு தோட்டா துளைக்காத ஆடைகள் தேவையாக இருந்தது. 2014 வரையில் நமது பாதுகாப்பு படை வீரர்கள் எல்லையில் அந்த ஆடைகள் இல்லாமல்தான் சண்டையிட்டார்கள். 

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், புல்லட் புரூப் ஆடைகளை தயாரிக்கும் நடவடிக்கையில் இறங்கினோம். தற்போது, சர்வதேச தரத்துடன் அந்த ஆடைகள் தயாரிக்கப்பட்டு 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இவ்வாறு மோடி கூறினார். 

.