காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு: 4 ராணுவ வீரர்கள் பலி!

வடக்கு காஷ்மீரில் குரேஸ் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் ஊடுறுவ முயன்றுள்ளனர்

காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு: 4 ராணுவ வீரர்கள் பலி!
Srinagar:

வடக்கு காஷ்மீரில் குரேஸ் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் ஊடுறுவ முயன்றுள்ளனர். அப்போது, தீவிரவாதிகளைத் தடுக்க ராணுவ வீரர்கள் முயன்றுள்ளனர். இரு தரப்புக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடந்துள்ளது. இதனால், ராணுவ அதிகாரி ஒருவரும் 3 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளின் ஊடுறுவல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது என்றும், ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் ராணுவத் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீநகரிலிருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குரேஸ் பகுதியில் சுமார் 8 தீவிரவாதிகள் இந்திய எல்லைக் கோட்டை கடக்க முயன்றனர். அப்போது, அவர்களை எல்லையில் கண்ட ராணுவத்தினர் துப்பாக்கிசூடு நடத்தினர். தீவிரவாதிகளும் பதிலுக்கு துப்பாக்கிசூட நடத்தினர். 

இரு தரப்புக்கும் இடையிலான துப்பாகிசூடு இன்னும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை இரவிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் குரேஸில் உள்ள இந்திய ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.