5 நாட்களில் ரூ. 100 கோடி! வசூலை அள்ளிக்குவிக்கும் அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்!!

தெலுங்கில் மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி கபிர் சிங் என்ற பெயரில் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
5 நாட்களில் ரூ. 100 கோடி! வசூலை அள்ளிக்குவிக்கும் அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்!!

கபீர் சிங் படத்தில் ஷாகித் கபூர்.


New Delhi: 

தெலுங்கில் மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் 5 நாட்களில் ரூ. 104.90 கோடியை வசூலித்துள்ளது. இந்த தகவலை பிரபல சினிமா ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார். 

இந்தியில் கபீர் சிங்கும், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானியும் நடித்துள்ளனர். முன்னதாக சல்மான் கான் நடித்த பாரத் திரைப்படம் 4 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை பெற்றிருந்தது. 

இதற்கு அடுத்த படியாக கபீர் சிங் 5 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் 7 நாட்களில் ரூ. 100 கோடியை வசூலித்த கேசரி திரைப்படம் உள்ளது. இதில் ஹீரோவாக அக்சய் குமார் நடித்திருக்கிறார். 

ரன்வீர் சிங்கின் கல்லிபாய் 8 நாட்களிலும், அஜய் தேவ்கானின் டோட்டல் டமால் 9 நாட்களிலும் ரூ. 100 கோடியை வசூலித்திருந்தது. 

ஒரிஜினல் திரைப்படமான தெலுங்கு அர்ஜுன் ரெட்டி கடந்த 2017-ல் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது இந்த திரைப்படம் தமிழில் ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் ஹீரோவாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்து வருகிறார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................