‘அவென்ஜர்ஸ்’-க்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ஆன்தம்; இது இணைய வைரலுங்க!

மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், படத்தின் இயக்குநர் ஜோ ரூசோ, இந்தப் பாடலை வெளியிட்டார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘அவென்ஜர்ஸ்’-க்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ஆன்தம்; இது இணைய வைரலுங்க!

மார்வெல் ஆன்தம் பாடலில் இருந்து ஒரு ஸ்டில். (நன்றி: யூடியூப்)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. ஏப்ரல் 1 ஆம் தேதி இந்த ஆன்தம் ரிலீஸ் செய்யப்பட்டது
  2. ஏ.ஆர்.ரகுமான், இந்தப் பாடலை இசையமைத்துப் பாடியுள்ளார்
  3. வரும் ஏப்ரல் 26-ல் 'எண்டு கேம்' ரிலீஸ் ஆகிறது

வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி, ‘அவென்ஜர்ஸ்: எண்டு கேம்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அந்தத் திரைப்படத்துக்காக இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான், ‘மார்வெல் ஆன்தம்' ரிலீஸ் செய்வார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலைநில், அந்த ஆன்தம் தற்போது இந்தியில் வெளியாக வைரலாகி வருகிறது. இந்த ஆன்தம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடைசியாக வெளியான ‘அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' திரைப்படத்தை அடுத்து, வில்லன் தானோஸுக்கு எதிராக சூப்பர் ஹீரோக்கள் எப்படி போரிட உள்ளனர் என்பது குறித்து பாடல் முழுவதும் காட்சிகள் மூலம் விவரிக்கப்படுகிறது. 

மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், படத்தின் இயக்குநர் ஜோ ரூசோ, இந்தப் பாடலை வெளியிட்டார். ரகுமான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

மார்வெல் ஆன்தமை காண:

இந்த ஆன்தமை இசையமைத்தது குறித்து முன்னதாக ரகுமான், ‘என் குடும்பத்திலேயே நிறைய மார்வெல் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் திருப்தியளிக்கும் வகையில் ஒரு நல்ல பாடலை இசையமைக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகமாக என் மீது இருந்தது. இந்தப் பாடல் அவர்களுக்கு, இசைப் பிரியர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................