This Article is From Feb 04, 2019

அனுஷ்கா ஷர்மாவின் உருவ அமைப்பு கொண்ட ஜூலியா... கோலியை டேக் செய்த நெட்டிசன்கள்!

ஜூலியாவின் புகைப்படமும், அனுஷ்காவின் இரண்டு ஆண்டு பழைய புகைப்படம் ஒன்றும் பதிவிடப்பட்டிருந்தது. 

அனுஷ்கா ஷர்மாவின் உருவ அமைப்பு கொண்ட ஜூலியா... கோலியை டேக் செய்த நெட்டிசன்கள்!

அனுஷ்காவை போல் உள்ள ஜூலியா வண்ணம் பூசப்பட்ட தலைமுடியுடன் தோன்றியுள்ளார்.

சல்மான் கானின் உருவ அமைப்பு கொண்ட ஒருவர் சமீபத்தில் வைரலானார். இப்போது அதேபோல் அனுஷ்கா ஷர்மாவின் உருவ மாதிரி வைரலாகியுள்ளார். சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு ட்விட்டில் அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கெல்ஸ் மற்றும் அனுஷா இருவரையும் ஒப்பிட்டு வந்த புகைப்படம் வைரலானது. இருவரும் ஒரே உருவ அமைப்பு கொண்டவர்களாக உள்ளனர்.

செனோரிட்டா எனும் ட்விட்டர் கணக்கிலிருந்து ''இது உண்மையில் அனுஷ்கா தானா" என்ற கேள்வியுடன் இருவரது போட்டோவும் பகிரப்பட்டிருந்தது. அதில் ஜூலியாவின் புகைப்படமும், அனுஷ்காவின் இரண்டு ஆண்டு பழைய புகைப்படம் ஒன்றும் பதிவிடப்பட்டிருந்தது. 

இதற்கு ட்விட்டர் , இன்ஸ்டாகிராமில் கருத்துகள் குவிந்த வண்ணம் இருந்தன. அதில் அனுஷ்காவை போல் உள்ள ஜூலியா வண்ணம் பூசப்பட்ட தலைமுடியுடன் தோன்றியுள்ளார். இதனை சில இவர்கள் இரட்டையர்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

utplmfi8

சிலர் இந்த படத்தில் அனுஷ்கா ஷர்மாவின் கணவரும், இந்திய கேப்டனுமான‌ விராட் கோலியை டேக் செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.

ஜூலியா மைக்கேல் க்ராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


.