இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி: கோவையில் 7 பேர் கைது

அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி கட்சியின் மூகாம்பிகை மணி ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி: கோவையில் 7 பேர் கைது
Coimbatore: 

கோவையில் உள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி  கட்சியின் மூகாம்பிகை மணி ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்வதற்காக சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதீன் ஆகியோர் கோவை இரயில் நிலையத்தை வந்தடைந்த போது, 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோவை காவல் துறையினர், 4 பேருக்கும் உதவியாய் இருந்த ஆஷிக் என்பவரை கைது செய்து மேலும் 2 நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ஆட்டோ பைசல் என்ற நபரை நேற்று முன்தினம் காவல் துறையினர் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அன்வர் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ளோரின்  செல்ஃபோன்  உரையாடல் பதிவுகள், வாட்ஸ் ஆப் பதிவுகளை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்

கைது செய்யப்பட்டுள்ள 7 பேரும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின்(உபா)கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட திட்டமிட்டதால் கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளனசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................