This Article is From Jul 13, 2018

5 ரூபாய்க்கு உணவு, கே.எஃப்.சிக்கே சவால் விடும் ‘அண்ணா கேன்டீன்’ ஆந்திராவில் தொடக்கம்

ரூபாய்க்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கும் ‘அண்ணா கேன்டீன்’ அரசு உணவகத்தை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்

5 ரூபாய்க்கு உணவு, கே.எஃப்.சிக்கே சவால் விடும் ‘அண்ணா கேன்டீன்’ ஆந்திராவில் தொடக்கம்
Amaravati , Andhra Pradesh:

5 ரூபாய்க்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கும் ‘அண்ணா கேன்டீன்’ அரசு உணவகத்தை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.

விஜயவாடாவில் உள்ள அண்ணா கேன்டீனை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் சந்திர பாபு நாயுடு. முதல் கட்டமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், 60 அண்ணா கேன்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன. அக்‌ஷயா பாத்ரா என்ற அமைப்பு அனைத்து அண்ணா கேன்டீன்களின் நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்ளும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறிதியாக, மாநிலம் முழுவதும், மலிவு விலை உணவு வழங்கும் அண்ணா கேன்டீன்கள் தொடங்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்திருந்தார்.
 

kffx48geil

வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில், அரசு நடத்தும் மலிவு விலை உணவகங்களின் செயல்பாடுகளை ஆந்திர அமைச்சர்கள் தெரிந்துகொண்டனர். எனினும் நிதி நெருக்கடி காரணமாக, அமல்படுத்து முடியாமல் இருந்த இந்த திட்டம் இப்போது நிறைவேறியுள்ளது.

மறைந்த தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரான என்.டி. ராமா ராவ் அவர்களின் நினைவாக ‘அண்ணா கேன்டீன்’ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், முதல் அண்ணா கேன்டீன் அமராவதி வெல்காபுடி அரசு தலைமையகத்தில் சோதனை திட்டமாக தொடங்கப்பட்டது. அதன் பிறகு 3 இடங்களில் சோதனை திட்டமாக அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டது.

தேர்தல் தேதிகள் நெருங்கும் வேளையில், மாநிலம் முழுவதும் 203 அண்ணா கேன்டீன்களை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. “ அண்ணா கேன்டீனை சர்வதேச அளவில் முன்னோடி உணவகமாக கூற முடியும். கே.எஃப்.சி, மெக் டொனால்ட் போன்ற உணவகங்களுக்கு சவால் விடும் அளவில் சர்வதேச தரத்தில் இருக்கும். சுத்தம், சுகாதாரம், தரமான சூழல் என எந்த அம்சமாக இருந்தாலும், சிறப்பான முறையில் இங்கு செயல்படுத்தப்பட்டிருக்கிறது” என்று திறப்பு விழாவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கேன்டீனில் சி.சி.டிவி கேமராக்கள் போன்ற டெக்னாலஜிகளை பொருத்தி தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “கேன்டீனுக்குள் நுழைபவரின் கைரேகை அல்லது கருவிழியும் பதியப்பட்டே அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம், மோசடியில் ஈடுபடுவர்கள் நுழைவதை தடுக்க முடியும்” என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
 

.