1 முதல்வர்; 5 துணை முதல்வர்கள்: ஆந்திராவில் பட்டையைக் கிளப்பும் ஜெகன் ரெட்டி!

தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பணி புரியும் ஊழியர்கள், வரிசையில் நின்று முதல்வர் ஜெகனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
1 முதல்வர்; 5 துணை முதல்வர்கள்: ஆந்திராவில் பட்டையைக் கிளப்பும் ஜெகன் ரெட்டி!

இன்று காலை சரியாக 8:39 மணிக்கு ஜெகன், முதல்வராக தலைமைச் செயலகத்தில் பணியை ஆரம்பித்தார். 


Amaravati, Andhra Pradesh: 

ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது பணிகளை ஆரம்பித்தார். இன்று காலை சரியாக 8:39 மணிக்கு ஜெகன், முதல்வராக தலைமைச் செயலகத்தில் பணியை ஆரம்பித்தார். 

தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பணி புரியும் ஊழியர்கள், வரிசையில் நின்று முதல்வர் ஜெகனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். ஜெகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை இன்று காலை சுமார் 11:49 மணிக்கு, தங்களது பணிகளை ஆரம்பித்தனர். 

ஆந்திராவில் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. இதில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தம் இருக்கும் 175 இடங்களில் 151 தொகுதிகளைக் கைப்பற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. 

இதைத் தொடர்ந்து சமீபத்தில் ஆந்திர முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஜெகன் ரெட்டி. அவர் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். 

நேற்று காலை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் 25 அமைச்சர்கள் இருப்பார்கள் என்றும் 5 துணை முதல்வர்கள் செயல்படுவார்கள் என்றும் கூறினார் ஜெகன் மோகன் ரெட்டி. 

பட்டியல் இனத்தவர்களில் இருந்து ஒருவர், பழங்குடியினத்தவர்களைச் சேர்ந்த ஒருவர், பிற்படுத்தப்பட்டவர்களில் இருந்து ஒருவர், சிறுபான்மையினர்களில் இருந்து ஒருவர் மற்றும் காபு சமூகத்தில் இருந்து ஒருவர் என்று துணை முதல்வர்கள் பதவியேற்க உள்ளனர். 

அதேபோல மாநில அமைச்சரவையில் அதிகமானோர் நலிவடைந்த சமூகத்தில் இருப்பவர்கள்தான் இருப்பர் என்று ஜெகன் ரெட்டி கூறியுள்ளார். 

அமைச்சரவை எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்து சிறிது காலத்தில் ரிவ்யூ செய்யப்பட்டு, மீண்டும் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசில், இரண்டு துணை முதல்வர்கள் பதவியில் இருந்தனர். அதில் ஒருவர் காபு சமூகத்தையும் மற்றவர் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தையும் சேர்ந்தவராக இருந்தனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................