ஆனந்த் மஹிந்திராவை ஈர்த்த பன்மொழி சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார்

ஆனந்த் மஹிந்திரா வைரல் வீடியோவை பார்த்து ஈர்க்கப்பட்டு அவரது குழுவை அந்த சிறுவனை அடையாளம் கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொண்டார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஆனந்த் மஹிந்திராவை ஈர்த்த பன்மொழி சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார்

ஆனந்த் மஹிந்திரா இந்த பையனின் பழைய வைரல் வீடியோவை பார்த்து ஈர்க்கப்பட்டார் மற்றும் அவரது குழுவை அந்த சிறுவனை அடையாளம் கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

வணிகத் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பெரும்பாலும் திறமையான நபர்களின் சுவாரஸ்யமான வைரல் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (அவருடைய WhatsApp Wonderboxலிருந்து பல வீடியோக்கள்)ட்விட்டரில் பகிர்ந்துக் கொள்வார். அவர் இந்த ட்வீட் மூலம் இந்த நபர்களை கொண்டாடுவது மட்டுமில்லை, அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்களை இந்த மக்களை கண்டுபிடிக்க உதவுமாறும் கேட்கிறார். அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டவர், மும்பையில் இருக்கும் ஒரு காற்றாடி விற்பனையாளர், அவர் சமீபத்தில் திரு மஹிந்திராவின் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டார், அவர் அந்த பையனின் பழைய வைரல் கிளிப்பைக் பார்த்ததால் அவர் ஈர்க்கப்பட்டார்.

ஜூலை 2 அன்று ட்விட்டர் யுஸர் திரு .ஆஸ்டின் ஸ்கார்யா மும்பை தெருக்களில் காற்றாடி விற்க பல்வேறு மொழிகளைப் பயன்படுத்தும் ஒரு பையனைப் பற்றி ஒரு ட்வீட் செய்திருந்தார்.அந்த ட்வீட்டில் அந்த பையனின் வீடியோவும் இருந்தது.

 

 

சிறுவனின் திறமைகளால் ஈர்க்கப்பட்ட திரு மஹிந்த்ரா, அவரை கண்டுபிடிப்பதற்கு ட்விட்டரிடம் உதவிகளைக் கேட்டார்.

 

 

அவருடைய இந்த ட்டிவீட் 3,000 லைக்களயும் 700 ரீட்விட்களையும் பெற்றிருக்கிறது.

பல ட்விட்டர் யுஸர்ஸ் இது ஒரு பழைய கிளிப் என்று சுட்டிக்காட்டினர் மற்றும் இது இந்த சிறுவனின் ஆரம்பக் கால வீடியோ என்பதால் ஒருவேளை வளர்ந்துதிருப்பான் என்றும் கூறினர்.

இன்று, திரு மஹிந்திரா வீடியோவில் அதே பையனைப் பற்றி ஒரு அப்டேட்டைக் பகிர்ந்து கொண்டார். திரு மஹிந்திராவின் குழு அவரை கண்டுபிடித்து விட்டது. "அவரது பெயர் ரவி செக்கலியா மற்றும் அவர் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் இருக்கிறார், மேலும் காற்றாடிகளை விற்கிறார்,"என திரு மஹிந்திரா ட்வீட் செய்தார், மேலும் அவரது குழு இப்போது "அவரது திறனை வளர்க்க உதவும் ஒரு திட்டம் செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்".

 

 

 

 

இந்த ட்வீட் ட்விட்டரில் நிறைய அன்பை வென்றுள்ளது மற்றும் மொத்தமாக 2,500 லைக்ஸை ஐந்து மணிநேரத்திற்கு முன்பு பெற்றுள்ளது.

இது ஒரு சூப்பர் செய்தி... வணங்குகிறேன். இது தூண்டுதலாகும். இந்த திறமையான சிறுவனைப் பற்றி அதிகம் கேட்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என "ஒரு ட்விட்டர் பயனாளர் கூறுகிறார்." பெரிய சைகை. நல்ல வேலையைத் தொடருங்கள் "என்கிறார் மற்றொருவர்.

சில மாதங்களுக்கு முன்பு, ஆனந்த் மஹிந்திரா "ஷூ டாக்டர்" குறித்து ட்வீட் செய்தார், அவர் "இந்திய மேலாண்மை நிறுவனத்தின் மார்க்கெட்டிங் கற்க வேண்டும்" என்றார். ட்டுவீட் செய்த இரண்டு வாரத்துக்குள் இந்த ஷீ டாக்டரை அவரது குழு அடையாளம் கண்டுக் கொண்டது மற்றும் அவருக்கு உதவும் என்று திரு. மஹிந்திரா ட்விட் செய்தார்.

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................