This Article is From Jul 02, 2019

இப்படியொரு ‘டோர் க்ளோஸர்’ பார்த்திருக்கீங்க - வேற லெவல் கண்டுபிடிப்பு!

பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, கண்டுபிடித்தவருக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

இப்படியொரு ‘டோர் க்ளோஸர்’ பார்த்திருக்கீங்க - வேற லெவல் கண்டுபிடிப்பு!

இந்த வீடியோ முதலில் டிக்-டாக் செயலியில்தான் ஷேர் செய்யப்பட்டது

தண்ணீர் பாட்டில் மூலம் செய்யப்பட்ட ‘டோர் க்ளோஸர்' குறித்த வீடியோ ஒன்று ஆன்லைனில் வைரலாகியுள்ளது. மகிந்திரா வாகன தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, இது குறித்தான வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்த பிறகு, மேலும் படுவைரலாக பரவி வருகிறது. இந்திய கண்டுபிடிப்புகளை எப்போது பார்த்தாலும், அதை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து, ஆதரவு கொடுக்கும் பழக்கம் ஆனந்த் மகிந்திராவுக்கு இருக்கிறது. அப்படித்தான் அவர் இந்த கண்டுபிடிப்பு குறித்தும் பகிர்ந்துள்ளார். 

இது குறித்து அவர் ட்விட்டரில், “தினம் தினம் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இருக்கும் கண்டுபிடிப்புகள் குறித்தான வீடியோக்கள் என்னிடம் நிறைய உள்ளன. இந்த நபர் 1,500 ரூபாய் மதிப்புள்ள ஹைட்ராலிக் டோர் க்ளோஸருக்கு பதில் வெறும் 2 ரூபாய் செலவு செய்து அதை நிவர்த்தி செய்துள்ளார். பலே” என்று கூறியுள்ளார்.
 

அந்த வீடியோவை கீழே பாருங்கள்:

இந்த வீடியோ முதலில் டிக்-டாக் செயலியில்தான் ஷேர் செய்யப்பட்டது. வீடியோவில், தண்ணீரால் நிரப்பப்பட்ட பாட்டில் ஒன்று கதவு ஒன்றுக்கு மேல் தொங்க விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை கதவு திறக்கப்பட்டு யாராவது வெளியேறிய பின்னர், அந்த பாட்டில் கதவை சீராக மூடுகிறது. 

பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, கண்டுபிடித்தவருக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 
 

Click for more trending news


.