“இது ஏன் முன்னரே நடக்கவில்லை!”- சட்டப் பிரிவு 370 ரத்து குறித்து ஆனந்த் மஹிந்திரா

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு ரத்தானது குறித்தான உத்தரவில் நேற்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
“இது ஏன் முன்னரே நடக்கவில்லை!”- சட்டப் பிரிவு 370 ரத்து குறித்து ஆனந்த் மஹிந்திரா

அரசு, காஷ்மீர் விவகாரத்தில் மிகவும் தன்னிச்சையாகவும் எதேச்சதிகார போக்குடனும் நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. 370 ரத்து செய்ததற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மஹிந்திரா
  2. 370 ரத்து முன்னரே நடந்திருக்க வேண்டும்: ஆனந்த் மஹிந்திரா
  3. இது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு- மஹிந்திரா

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதற்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார் மஹிந்திரா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா. 

“சில நேரங்களில் எடுக்கப்படும் சில முடிவுகளைப் பார்க்கும் போது, ‘ஏன் இது முன்னரே செய்யப்படவில்லை' என்ற கேள்வி எழும். அதைப் போலத்தான் காஷ்மீர் குறித்தான முடிவு அமைந்துள்ளது. நமது தேசத்தின் ஒரு பகுதியாக காஷ்மீரையும் காஷ்மீரிகளையும் அரவணைக்க வேண்டிய தருணம் இது” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு ரத்தானது குறித்தான உத்தரவில் நேற்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார். கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த பாதுகாப்புப் படையினர் காஷ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் முன்னணி அரசியல் தலைவர்கள் பலர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அரசு, காஷ்மீர் விவகாரத்தில் மிகவும் தன்னிச்சையாகவும் எதேச்சதிகார போக்குடனும் நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
 

காஷ்மீர் குறித்த உத்தரவு வந்தவுடன் ஆனந்த் மஹிந்திரா, “இன்று வெறுமனே இன்னொரு நாள் என்று என்னால் கடந்து செல்ல இயலவில்லை. காஷ்மீர் விவகாரம் குறித்து மொத்த நாடும் எதிர்பார்த்து காத்திருந்தது. அங்கிருக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கிறேன். இதன் மூலம் தேசம் பலப்படும் என்றும், எதிர்காலம் நன்றாக இருக்கும் எ

நேற்று காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதற்கான மசோதா மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்களில் சிலர் வெளிநடப்பு செய்தனர். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி, நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம், ஜெகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்டவை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................