Fitness Video : 72 வயதிலும் வொர்க் அவுட் செய்யும் பெண்மணி

ஓய்வு பெற்ற ஆசிரியர் டயர்களை புரட்டுவதையும் பர்பீஸ் செய்வதையும் 70 கிலோ எடையை எளிதாக தூக்குவதையும் வீடியோவில் காணலாம்.

Fitness Video : 72 வயதிலும் வொர்க் அவுட் செய்யும் பெண்மணி

லாரா கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பயிற்சி பெற்று வருகிறார்.

New Delhi:

லாரா புர்ஷோன் என்ற 72 வயதான பெண்மணி உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. ட்விட்டரிலும் பரவலாக பகிரப்பட்டது. ஓய்வு பெற்ற ஆசிரியர் டயர்களை புரட்டுவதையும் பர்பீஸ் செய்வதையும் 70 கிலோ எடையை எளிதாக தூக்குவதையும் வீடியோவில் காணலாம். 

இந்த வீடியோவை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் பகிர்ந்து கொண்டுள்ளார். “இந்த இரும்பு பெண்மணியுடன் ஒப்பிடும் போது சோபேறி மற்றும் மந்தமானவன்” என்று கூறியுள்ளார்.

“இது ஒரு ஆர்வமூட்டக்கூடிய வீடியோ. கட்டாயம் பார்க்க வேண்டும். இந்த பெண் இனிமேல் நான் உடற்பயிற்சிகளையோ அல்லது யோகா வகுப்பினையோ தவிர்க்க மாட்டேன். வயது என்பது வெறும் எண் என்பதை நிரூபித்துள்ளார் என்று ட்விட்டர் பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவு 700க்கும் மேற்பட்ட ரீட்வீட்டை பெற்றுள்ளது. 4.5 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை சேகரித்துள்ளது.  People.com செய்தியின் படி, லாரா கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பயிற்சி பெற்று வருகிறார். “ஒருவரின் வயது எதையும் செய்ய தடுக்காது” என்று லாரா தெரிவித்ததாக கூறியுள்ளது. 

அவரது வீடியோவைக்கண்டு, கடின உழைப்பினால் ஈர்க்கப்பட்டவர்கள் பலரும் உற்சாகமாக பாராட்டினை தெரிவித்து வருகின்றனர். 

ட்விட்டர் பயனர் ஒருவர் “வாழ்க்கையின் குறிக்கோள்! 30 ஆண்டுகளுக்குப் பின் நான் லாராவைப் போல் ஆக விரும்புகிறேன். எனவே ஜிம் மற்றும் யோகவை இப்போதே தொடங்குகிறேன். ஆர்வத்தை கொடுத்த பதிவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். 

Click for more trending news


More News