This Article is From Mar 10, 2019

157 பேருடன் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது!

விபத்துக்குள்ளான விமானம் போயிங் 737-800 மேக்ஸ் வகையைச் சேர்ந்தது ஆகும்.

157 பேருடன் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது!

இன்று காலை 8:44 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது

Nairobi:

நைரோபிக்கு 149 பயணிகளுடன் புறப்பட்ட எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது என்று அந்நிறுவனம் சார்பில் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெரிவிக்கப்பட்ட தகவலில், ‘விமானம் ஈ.டி 302, ஷோஃப்து டவுனில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விமானம் போயிங் 737-800 மேக்ஸ் வகையைச் சேர்ந்தது ஆகும். இன்று காலை 8:44 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 8:38 மணிக்கு, அப்பீஸ் அபாடாவில் இருக்கும் போல் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டது விபத்துக்குள்ளான விமானம். ஆனால், அடுத்த சில நிமடங்களில் சுமார் 8:44 மணிக்கு, விமானத்துடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. 

‘விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த விபத்தில் யாரேனும் உயிர் பிழைத்தார்களா என்பது குறித்து இன்னும் தகவல் வரவில்லை' என்று எத்தியோப்பன் ஏர்லைன்ஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் அலுவலகம், விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்துக்கு, ‘அரசு சார்பாகவும், எத்தியோப்பிய மக்கள் சார்பாகவும் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்' என இரங்கல் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எத்தியோப்பிய நாட்டின் அரசுக்குச் சொந்தமான எத்தியோப்பன் ஏர்லைன்ஸ், சென்ற ஆண்டு மட்டும் 10.6 மில்லியன் பயணிகளை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு அழைத்துச் சென்றது. கடைசியாக 2010 ஆம் ஆண்டு, எத்தியோப்பன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. அதன் பிறகு இப்போதுதான் மிகப் பெரிய விபத்து நடந்துள்ளது. 

.