அசாமில் 5.5 ரிக்டர் நிலநடுக்கம்; மேற்கு வங்கம், பிகாரிலும் தாக்கம்!

சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது

 Share
EMAIL
PRINT
COMMENTS
அசாமில் 5.5 ரிக்டர் நிலநடுக்கம்; மேற்கு வங்கம், பிகாரிலும் தாக்கம்!

இன்று காலை 10:20 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

New Delhi: 

அசாமின் கொக்ராஜர் மாவட்டத்தில் இன்று 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வட கிழக்கில் இருக்கும் மற்ற மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், கூச் பெகார், அலிபிர்துவார் ஆகிய மாவட்டங்களிலும், பிகாரிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 10:20 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை வாரியத்தின் தகவல்படி, இதுவரை எந்த உயிர்ச்சேதமோ, உடமைகள் சேதமோ ஏற்படவில்லை.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................