This Article is From Mar 30, 2019

ஜப்பானில் கடை நடத்தி வியாபாரம் செய்யும் ‘சூப்பர்’ நாய்!

கென்-குன் பற்றிய செய்தி தற்போது இணைய வைரல் ஆகியுள்ளது.

ஜப்பானில் கடை நடத்தி வியாபாரம் செய்யும் ‘சூப்பர்’ நாய்!

சமத்தாகவும் சாமர்த்தியமாகவும் வியாபாரம் பார்த்து வரும் கென்-குன்-ஐப் பலர் பாராட்டி வருகின்றனர். 

நீங்கள் நாய் பிரியரோ இல்லையோ, இந்த செய்தி உங்களை உற்சாகப்படுத்தும். ஜப்பானில் இருக்கும் ஹோக்கைடோ தீவில், கென்-குன் என்கின்ற நாய், சொந்தமாக சர்க்கரை வள்ளிக் கிழங்கு விற்று வியாபாரம் செய்து வருகிறது. இது குறித்தத் தகவலை மெட்ரோ செய்தி அளித்துள்ளது. 

ஒரு பெட்டிக்கடை போல இருக்கும் கடையின் கவுன்டருக்குப் பின்னால் கென்-குன் நின்று கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு பதாகையில், ‘நான் ஒரு நாய் என்பதால், உங்களுக்கு சில்லரையைத் தர முடியாது' என்று எழுதப்பட்டுள்ளது. 
 

கென்-குன் கடையில் எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்:

கென்-குன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், எந்த வள்ளிக் கிழங்கு வேண்டுமோ அதை எடுத்துக் கொண்டு, அதற்கான பணத்தையோ, அல்லது அதற்கு மேலோ பணப் பெட்டியில் போட்டு விடுகின்றனர். கிழங்கிற்கான காசு போக மிச்சம் இருப்பது கென்-குன் உணவிற்கு செலவிடப்படும். 

கென்-குன் பற்றிய செய்தி தற்போது இணைய வைரல் ஆகியுள்ளது. சமத்தாகவும் சாமர்த்தியமாகவும் வியாபாரம் பார்த்து வரும் கென்-குன்-ஐப் பலர் பாராட்டி வருகின்றனர். 

கென்-குன் நாயுக்கு, வெறும் வியாபாரம் செய்வது மட்டும் வேலை கிடையாது. தனது உரிமையாளருடன் கென்-குன் நாள் இறுதியில், நகரத்தை ஒரு ரவுண்டு அடித்து வருவதாக மெட்ரோ செய்தி நிறுவனம் கூறுகின்றது. 

இந்த நாய் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கமென்ட்ஸ் பிரிவில் பதிவிடுங்கள். 
 

Click for more trending news


.