This Article is From Apr 05, 2019

இன்னும் மனிதம் இருக்கின்றது - மிசோரமில் சிறுவனின் நெகிழ்ச்சியான நிகழ்வு

தன் சைக்கிளில் அடிப்பட்டு அந்த கோழி குஞ்சு இறந்தது கூட தெரியாமல், கோழி குஞ்சு உடன் தன் வீட்டிற்கு சென்று தன் தந்தையிடம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளான்.

இன்னும் மனிதம் இருக்கின்றது - மிசோரமில் சிறுவனின் நெகிழ்ச்சியான நிகழ்வு

வைரலான சிறுவனின் புகைப்படம்

மிசோரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன், தன் சைக்கிளால் தெரியாமல் கோழி குஞ்சு ஒன்றின் மீது மோதினான். அதன் பின் தன் சேமிப்பு பணத்தில் இருந்து பத்து ரூபாய் எடுத்து அந்த கோழி குஞ்சை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளான்.

மிசோரத்தை சேர்ந்த ஆறு வயதான டெரெக் சி லால்சச்னாமா என்ற சிறுவனின் இந்த கள்ள கபடமற்ற செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தன் சைக்கிளில் அடிப்பட்டு அந்த கோழி குஞ்சு இறந்தது கூட தெரியாமல், கோழி குஞ்சுடன் தன் வீட்டிற்கு சென்று தன் தந்தையிடம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளான்.

பின் தானாக பத்து ரூபாயுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளான் டெரெக். அந்த சிறுவனின் இந்த கள்ள கபடமற்ற செயலை கண்ட அந்த மருத்துவனையின் செவிலி ஒருவர் டெரெக்கை புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தான் இப்போது இணையதள வைரல்.

இந்த புகைப்படத்தை பகிர்ந்த சங்கா சேஸ் என்டிடிவிக்கு தெரிவிக்கும் போது, ‘டெரெக்கின் தந்தை காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். அவருக்கே இந்த செயல் புதுமையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது உண்மையிலேயே நெகிழ்ச்சியான நிகழ்வு' என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

Click for more trending news


.