This Article is From Feb 06, 2020

பரவும் கொரோனா - அமுல் நிறுவனம் வெளியிட்ட புதிய விளம்பரம்!

பிப்ரவரி 3 ஆம் தேதி கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கொரோனா வைரஸ் தொற்றை மாநில பேரிடராக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரவும் கொரோனா - அமுல் நிறுவனம் வெளியிட்ட புதிய விளம்பரம்!

அந்த படத்தில் 'Wuhan Se Yahan Le Aaye' ('என்னை அங்கிருந்து இங்கு கொண்டு வருகிறேன்') Amul Homecoming Snack என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பால் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அமுல் தற்போது ஒரு புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கையால் வரையப்பட்ட ஓவியம் ஒன்றினைப் பதிவிட்டுள்ளது. அந்த ஓவியத்தில் ஒரு விமானத்தில் இருந்து முகமூடிகளுடன் சில பயணிகள் கீழே இறங்கி வருகின்றனர், அத்தோடு அந்த படத்தில் 'Wuhan Se Yahan Le Aaye' ('என்னை அங்கிருந்து இங்கு கொண்டு வருகிறேன்') Amul Homecoming Snack என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றால் 500-க்கும் மேற்பட்டோர் சீனாவில் இறந்துள்ளனர். மேலும் பலருக்கு இந்த நோய் பரவி வருவதாகவும் ஹூபே மாகாணத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமுல் வெளியிட்ட அந்த விளம்பரம், அண்மையில் வுஹான் நகரில் இருந்து தாயகம் வந்த இந்தியர்களை பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வுஹானில் இருந்து வந்த இந்தியர்களில் கேரளாவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கொரோனா வைரஸ் தொற்றை மாநில பேரிடராக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.