This Article is From Feb 22, 2019

‘’அமமுக கூட்டணி 38 தொகுதிகளில் போட்டியிடும்’’ – டிடிவி தினகரன் அறிவிப்பு

கூட்டணி குறித்த அறிவிப்பை டிடிவி தினகரன் இன்னும் வெளியிடவில்லை. கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திப்போம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

‘’அமமுக கூட்டணி 38 தொகுதிகளில் போட்டியிடும்’’ – டிடிவி தினகரன் அறிவிப்பு

தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 38 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை எந்தக் கட்சியினரும் இதுவரை சீண்டவில்லை. தேர்தல் குறித்த முடிவு ஏதும் அறிவிக்காமல் டிடிவி தினகரன் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தல் நிலைப்பாடு குறித்து பேசினார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தேர்தலை குறிவைத்து கட்சி நடத்துவதால்தான் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. அரசியலில் நாம் நியாயமாக செல்ல வேண்டும் என்ற முடிவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவை எதிர்த்த பாமக, தேமுதிகவுடன் எந்நாளும் கூட்டணி வைக்கப் போவதில்லை. சட்டசபையில் ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது என்று கூறியவர்களிடமும், மணிமண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் நாங்கள் கூட்டணி வைத்தால் எங்களைப் பற்றி தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்?

எங்கள் தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளில் போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

.