மோடி அமைச்சரவையில் அமித் ஷா இடபெறுவாரா? - பாஜக உயர்மட்டத்தில் நடப்பது என்ன?!

மோடி அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி அமைச்சரவையில் அமித் ஷா இடபெறுவாரா? - பாஜக உயர்மட்டத்தில் நடப்பது என்ன?!

பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அமித் ஷாவை மாற்றக் கூடாது என்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

New Delhi:


மத்தியில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. கூட்டணியாக இருந்து பெருவாரியான இடங்களை கைப்பற்றி இருந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான அளவுக்கு பாஜக தணித்தே 302 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இருப்பினும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து அமைச்சரவையில் பாஜக இடம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமித் ஷா அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்தும், பாஜக அமைச்சரவை குறித்துமான முக்கிய தகவல்களை பார்க்கலாம்...

1. 54 வயதாகும் அமித் ஷா அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவல் உறுதிபடுத்தப்படவில்லை. 

2. அரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநில தேர்தல்கள் விரைவில் வருகின்றன. இதேபோன்று மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் அமித் ஷாவை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றக் கூடாது என்றும் குரல்கள் எழுகின்றன. 

3. இந்த மாநில தேர்தல்களில் வெற்றி பெறுவது என்பது பாஜகவுக்கு மிக முக்கியான பணியாகும். எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவால் அதிக உறுப்பினர்களை பெற முடியும். 

4. தற்போது மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. மொத்தம் உள்ள 250 பேரில் 99 பேர் மட்டுமே பாஜக உறுப்பினர்களாக உள்ளனர். 

5. இதற்கிடையே புதிய பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்று கட்சி உயர்மட்டத்தில் பேசப்பட்டு வருவதாகவும் ஒரு தகவல் உள்ளது. 

6. ஏற்கனவே மத்திய அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தற்போதும் பொறுப்பில் தொடர்வார்கள் என்ற தகவலும் உள்ளது. 

7. ஆட்சியமைக்கப்பட்ட பின்னர் 100 நாட்களில் அமைச்சர்கள் தாங்கள் செய்தது என்ன என்பது பற்றிய ரிப்போர்ட் கார்டை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

8.  மக்களவை தேர்தலில் தோற்ற முக்கிய தலைவர்களும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

9. உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர் பொறுப்புகளில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. குறிப்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் அமைச்சர் பொறுப்புக்கு வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

More News