ஜேஎன்யூவில் தேச விரோத கோஷம் எழுப்பியவர்கள் சிறை வைக்கப்பட வேண்டியவர்கள்: அமித் ஷா

அவர்களை காப்பாற்றுங்கள்.. என்று ராகுல் பாபாவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் கூறுகிறார்கள்.. அவர்கள் என்ன உங்கள் சகோதரர்களா? என்று அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜேஎன்யூவில் தேச விரோத கோஷம் எழுப்பியவர்கள் சிறை வைக்கப்பட வேண்டியவர்கள்: அமித் ஷா

எனினும், அமித் ஷா தனது உரையில் மாணவர்கள் கோஷம் எழுப்பியதாக கூறப்படும் சரியான காலக்கெடு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. 

Jabalpur:

ஜேஎன்யூ வளாகத்தில் தேசவிரோத கோஷம் எழுப்பிய இளைஞர்கள் சிறையில் அடைக்க தகுதியானவர்கள் என்று கூறிய பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

மத்திய பிரதேசத்தின் ஜாபல்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அமித் ஷா பேசியதாவது, ஜேஎன்யூவில் சில இளைஞர்கள் தேசவிரோத கோஷங்களை எழுப்புகின்றனர். அவர்களை சிறையில் அடைக்க வேண்டாமா? 

தொடர்ந்து மக்கள் ஆரவாரங்களுக்கு மத்தியில் பேசிய அமித் ஷா, அவர்களை காப்பாற்றுங்கள்... அவர்களை காப்பாற்றுங்கள்.. என்று ராகுல் பாபாவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் கூறுகிறார்கள்.. அவர்கள் என்ன உங்கள் சகோதரர்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார். 

எனினும், அமித் ஷா தனது உரையில் மாணவர்கள் கோஷம் எழுப்பியதாக கூறப்படும் சரியான காலக்கெடு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. 

முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு பிப்.9ல் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக அப்போதைய ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் மற்றும் பலர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

More News