இப்தார் விருந்தாம்... நவராத்திரிக்கு விருந்து வைக்கணும்: பாஜக கிரிராஜ்சிங் ட்விடுக்கு குட்டு வைத்த அமித் ஷா

கிரிராஜ் சிங், “இதே நவராத்திரி விழாவில் உணவு விருந்தில் கலந்து கொண்ட புகைப்படமாக இது இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். நம்முடைய நம்பிக்கையை ஏன் மறைத்து கொள்ள வேண்டும். ஏதற்கு இதுபோன்ற பாசாங்கு?” என்பது போன்ற கருத்தை தெரிவித்து இருந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

நிதிஷ் குமார், சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் இப்தார் விருந்தில் கலந்து கொண்டனர்


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. பாஜகவை விமர்சிப்பவர்களை ‘பாகிஸ்தானுக்கு போ’ என்று கூறியுள்ளார் கிரிராஜ்ங்
  2. இப்தார் விருந்தில் கலந்து கொண்டதை கிரிராஜ் சிங் கிண்டல் செய்துள்ளார்.
  3. நவராத்திரி விருந்தினை தயார் செய்ய முடியுமா... என்று கேட்டுள்ளார்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்துள்ளார். பாரதிய ஜனதாவை விமர்சிப்பவர்களைஎல்லாம் ‘பாகிஸ்தானுக்கு போ' என்று விரட்டக்கூடியவர். பீகார் மாநில முத்லவர் நிதிஷ் குமார், சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் இப்தார் விருந்தில் கலந்து கொண்டு புகைப்படத்தினை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இப்தார் விருந்தில் கலந்து கொண்டதை கிரிராஜ் சிங் கிண்டல் செய்துள்ளார்.

இப்தார் விருந்து நிகழ்ச்சியில் நிதிஷ் குமார், சுஷில் குமார் மோடி, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள கிரிராஜ் சிங், “இதே நவராத்திரி விழாவில் உணவு விருந்தில் கலந்து கொண்ட புகைப்படமாக இது இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். நம்முடைய நம்பிக்கையை ஏன் மறைத்து கொள்ள வேண்டும். ஏதற்கு இதுபோன்ற பாசாங்கு? என்பது போன்ற கருத்தை தெரிவித்து இருந்தார். 

இது விமர்சனம் ஆனது. இதற்கு பதில் கொடுத்த நிதிஷ் குமார், கிரிராஜ் சிங் இதுபோன்று வேண்டுமென்றே பேசுவார். ஊடகங்கள் செய்தியாக்கலாம் என கூறியிருந்தார். 

இதுகுறித்து பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா, இது தொடர்பாக விளக்கம் கேட்டறிந்துள்ளார். மேலும் கிரிராஜ் சிங்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................