This Article is From Mar 25, 2019

முனைவர் ஆய்வுக்கு முடக்கு போட்ட மத்திய அரசு- கொதித்தெழுந்த கேரள பேராசிரியர்

கேரள மத்திய பல்கலைக்கழகம் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. ஆனால் சுற்றறிக்கை யாருடைய வழிகாட்டுதல் பேரில் வழங்கப்பட்டது என்பது தெளிவாக இல்லை. இந்த சுற்றறிக்கையில் பல்கலைக்கழக பதிவாளர் கையொப்பம் இட்டுள்ளார். பேராசிரியர் பதவி விலகிய பின்னர்,

என்னால் செய்ய முடிகிற ஒன்று வாரியத்தை விட்டு விலகுவது மட்டுமே -மீனா டி. பிள்ளை

ஹைலைட்ஸ்

  • பிஎச்டி ஆய்வுகள் “தேசிய முன்னுரிமைகள்”என்ற தலைப்பிற்கு முக்கியத்துவம்.
  • பேராசிரியர் மீனா டி.பிள்ளை பதவி விலகினார்
  • பல்கலைக்கழகம் ஒரு விளக்கத்தை வெளியிட்டது.
Thiruvananthpuram:

பிஎச்டி  ஆய்வு செய்யும் மாணவர்கள் “தேசிய முன்னுரிமைகள்” (national priorities) தொடர்பான தலைப்புகளில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பிற தலைப்புகளை ஊக்குவிக்கக் கூடாது என்ற அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதை எதிர்த்து கேரளாவில் உள்ள பேராசிரியரான மீனா டி பிள்ளை, கேரள மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வாரியக்  குழுவை விட்டு விலகியுள்ளார். மார்ச் 13 தேதியிட்ட சுற்றறிக்கையில் “அனைத்து துறை தலைவர்களும் இதன் மூலம் ஆசிரியர்களின் கூட்டத்தைக் கூட்டி தேசிய முன்னுரிமைகள் என்ற கருத்திலான ஆராய்சிகளை செய்ய மாணவர்களை வழி நடத்த வேண்டும்” என்றுக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை இந்த தலைப்பு தவிர்த்த பிற ஆராய்ச்சிகளை புறக்கணிக்கிறது. பேராசிரியர் மத்திய பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் மற்றும் ஒப்பிட்டு இலக்கியஆய்வுகள் சபையில் இருந்து ராஜினாமா செய்ததாக பேராசிரியர் மீனா டி.பிள்ளை தெரிவித்தார். இந்த சுற்றறிக்கை அதிர்ச்சி அளித்ததாக தெரிவித்துள்ளார். “இந்த சுற்றறிக்கையை வாசித்த போது நான் அதிர்ச்சியடைந்தேன், இது போன்ற ஒரு அறிக்கையை அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளது. என்னால் செய்ய முடிகிற ஒன்று வாரியத்தை விட்டு விலகுவது மட்டுமே. தேசிய முன்னுரிமைகளை தீர்மானிப்பவர் யார்? ஏன் இதைப் பற்றி மட்டும் ஆராய்ச்சி செய்வது ஏன்? பிற ஆராய்ச்சிகளை கட்டுப்படுத்துவது ஏன்? என்று கேட்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.  ஷெல்ப் -அட்டஸ்டடு அமைச்சரான (ஜவேத்கர்) புத்திசாலியான பிரதமர்(நரேந்திர மோடி) நாட்டில் உள்ள அறிவு ஜீவுகளிடம் வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என்று கூறுவார். ‘சிறிய அறிவு ஆபத்தான விஷயம்' என்று ஹிந்தியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பியான சசி தரூர், “மனித வள அமைச்சகத்தின் இந்த அறிக்கையினால் கேரளா பேராசிரியர் பதவி விலகியுள்ளார். இந்த போராட்டத்தில் பலரும் இணைந்து கொள்ள வேண்டியது அவசியம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

கேரள மத்திய பல்கலைக்கழகம் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. ஆனால் சுற்றறிக்கை யாருடைய வழிகாட்டுதல் பேரில் வழங்கப்பட்டது என்பது தெளிவாக இல்லை. இந்த சுற்றறிக்கையில் பல்கலைக்கழக பதிவாளர் கையொப்பம் இட்டுள்ளார். பேராசிரியர் பதவி விலகிய பின்னர், 

பல்கலைக்கழகம் ஒரு விளக்கத்தை வெளியிட்டது. 13.03.2019 தேதியிட்ட பல்கலைக்கழகத்தின் ஒரு சுற்றறிக்கை, சில ஊடகங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கேரள நிர்வாகத்தின் மத்திய பல்கலைக்கழக்த்தின் கவனத்திற்கு வந்தது. ‘தேசிய முன்னுரிமை' என்றவார்த்தை பயன்பாட்டின் படி தேசிய மற்றும் சமூகத்தின் பொருளாதார, சமூகம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பயனளிக்கும் தலைப்புகள் பற்றியது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  நானோ தொழில்நுட்பம், நானோ மருத்துவம், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆய்வு, அணுசக்தி, விஞ்ஞானம், நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றங்கள், இயற்கை வேளாண்மை குறித்த ஆராய்சிகள் சமீபத்திய ஆராய்ச்சிகளாக இடம் பெறுகின்றன. 

.