This Article is From Jan 18, 2019

குதிரை பேரம்! - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விடுதியில் தங்கவைப்பு!

104 பாஜக எம்.எல்.ஏக்கள் கடந்த ஒருவாரமாக டெல்லியில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

குதிரை பேரம்! - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விடுதியில் தங்கவைப்பு!

76 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பேருந்தில் வைத்து ஈகிள்டன் ரிசார்ட் அழைத்துச்செல்லப்பட்டனர்.

Bengaluru:

கர்நாடக அரசியலில் நடந்து வரும் குதிரை பேரத்தில் இருந்து காங்கிரஸ் தனது எம்.எல்.ஏக்களை விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இன்று மாலை 75 எம்.எல்.ஏக்களும் ஈகிள்டன் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அத்துடன் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சிலரும் ஆட்சிக்கு ஆதரவு அளித்திருந்தனர். இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏக்களான எச்.நாகேஷ் மற்றும் ஆர்.சங்கர் ஆகியோர் அரசுக்கு அளித்து வந்த தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டு பேரின் வாபஸினால் கர்நாடக அரசின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 119ல் இருந்து 117 ஆக குறைந்தது. சபாநாயகருடன் சேர்த்தால் மொத்தம் 118 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று பெங்களுரில் சட்டமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 79 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இறுதியாக 75 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அந்த 75 எம்எல்ஏக்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முடிந்த பின்பாக அதிரடியாக தற்போது காங்கிரஸ் கட்சியினர் அவர்களை ரிசார்ட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் ஒருபுறம் பாஜக எம்எல்ஏக்கள் தற்போது வரை கடந்த ஒருவாரமாக டெல்லியில் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 12 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கி பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத 4 எம்எல்ஏக்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகாவில் எங்களுடைய அரசை கவிழ்க்க பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

.