‘காவி’க்கு மாறிய அம்பேத்கர்.. உ.பி.யில் பரபரப்பு

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போரடிய அம்பேத்கருக்கு காவி வண்ணம் பூசி இந்துத்துவாவை திணிக்கிறார்கள் என்று எதிர்ப்பு எழுந்தது

‘காவி’க்கு மாறிய அம்பேத்கர்.. உ.பி.யில் பரபரப்பு

ஹைலைட்ஸ்

  • யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற உடன் காவி வண்ணத்திற்கு மாற்றப்பட்டது
  • காவி நிறம் பூசப்பட்டு கண்டனங்கள் எழுந்ததும், பழையபடியே மாற்றப்பட்டது
  • பரபரப்புகளால் சிலைக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது
Badaun, Uttar Pradesh: உத்தரப்பிரதேசம்:

உத்தரப்பிரதேசம் மாநிலம் படாவுன் பகுதியில் காவி நிறத்திற்கு மாற்றப்பட்ட அம்பேத்கர் சிலை மீண்டும் பழைய வண்ணத்திற்கு மாற்றப்பட்டது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜ முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற உடன் அனைத்து பகுதிகளும் காவி வண்ணத்திற்கு மாற்றப்பட்டது. இதில் கட்டடங்கள், சிலைகளும் தப்பவில்லை.

இந்நிலையில் படாவுன் மாநிலத்தில் அம்பேத்கர் சிலைக்கும் காவி நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டு தங்க நிறத்தில் மாலை அணிந்திருப்பது போன்று மாற்றப்பட்டிருந்து. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் எழுப்பியது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போரடிய அம்பேத்கருக்கு காவி வண்ணம் பூசி இந்துத்துவாவை திணிக்கிறார்கள் என்று எதிர்ப்பு எழுந்தது. பின்னர் மீண்டும் அம்பேத்கர் சிலையை பழையபடியே மாற்றப்பட்டது. இந்நிலையில் திரிபுராவில் லெனில் சிலை இடிப்பு, பாரத் பந்த் ஆகிய பரபரப்புகளால் அம்பேத்கர் சிலைக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.