அமேசான் காடு எரிந்தால் நமக்கென்ன? பேராபத்துகளை விளக்குகிறார் வெற்றிச்செல்வன்

இந்த சம்பவம் இயற்கையாக நடந்த கால நிலை மாற்றமாக இருக்கலாம், அல்லது மனிதனின் செயல்பாடுகள் காரணமாகவும் நடைபெற்று இருக்கலாம்

 Share
EMAIL
PRINT
COMMENTS
அமேசான் காடு எரிந்தால் நமக்கென்ன? பேராபத்துகளை விளக்குகிறார் வெற்றிச்செல்வன்

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அமேசான் காட்டு பகுதியில் காட்டுத் தீ பரவி வருகிறது. அருகில் உள்ள நகரத்தை புகை மண்டலம் சூழ்ந்ததைத் தொடர்ந்து ஊடகங்களின் கேமிராக்கள் கண்விழித்தன. இந்த செய்தி உலகம் முழுவதும் பரவி பல்வேறு அறிவியல் அறிஞர்கள், சூழலியல் ஆய்வாளர்கள் என பலரும் அச்சுறுத்தக்கூடிய கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். ஏன் இந்த அச்சம், பிரேஸிலில் உள்ள காட்டு பகுதி அழிவதால் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு இருக்கிறது? நாம் ஏன் இந்த பிரச்னைக்குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டும்? என்கிற கேள்விகள் இயல்பாகவே எழாமல் இல்லை. இந்த காரணங்களை தெரிந்துக்கொள்ள சூழலியல் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனை தொடர்பு  கொண்டு பேசினேன். அவரிடம் அமேசான் மழைக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. அதைத்தவிற இதுபோன்ற காட்டுத்தீ மூலம் மழைக்காடு சுற்றளவு குறைந்துக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் ஏன் இதைக்கண்டு அச்சப்படுகிறார்கள் போன்ற கேள்விகளை முன்வைத்தேன். கேள்விகளை உள்வாங்கிக்கொண்ட அவர், அறிவியல் பூர்வமான விளக்கங்களை இவ்வாறு நமக்கு அளித்தார்.

t99vbb5o

“பூமிக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குவதில் இரண்டு அம்சங்களுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. ஒன்று கடல் மற்றொன்று மழைக்காடுகள். கடலில் இருந்து சுமார் 70% ஆக்ஸிஜனை பூமிக்கு வழங்குகிறது. மீதம் இருக்கக்கூடிய 30% ஆக்ஸிஜனை அமேசான் போன்ற மழைக்காடுகள்தான் வழங்குகிறது. பூமியின் மத்திய ரேகையில் அமைந்துள்ள இடங்கள் என்று பார்க்கும் போது தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அடுத்து ஆசியா, இந்த மூன்று பகுதியில் இருக்கும் மழைக்காடுகளில் இருந்துதான் மீதம் இருக்கக்கூடிய 30% ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. அதில் அமேசான் காடுகள் என்பது மிகவும் பழமை வாய்ந்தது. இந்த காடுகளில் இருந்து நமக்கு அதிக அளவிலான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இந்த காடுகளின் அழிவு என்பது நமக்கு கிடைக்கக்கூடிய ஆக்ஸிஜன் உற்பத்தியில் மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும்.

4m0up3g

இந்த காடுகள் எரிவதன் மூலம் அதிகபடியான புகை வெளியேறுகிறது. ஏற்கனவே புவி வெப்பமயமாதல் அதிகரித்து இருக்கக்கூடிய சூழலில் இந்த புகையால் புவி வெப்பமயமாதலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இவை இந்த நிகழ்வின் உடனடியான பாதிப்புகள். கடலும் காடுகளும்தான் கார்பனை உள்ளிழுத்து நமக்கு தேவையான ஆக்ஸிஜனை தருகிறது. புவி வெப்பயமாதலுக்கு காரணமாக இருக்கக்கூடிய CO2 அளவை குறைப்பதற்கு அதை சமநிலையில் வைத்திருக்கவும் இந்த காடுகளுடைய தேவைகள் அவசியம். இப்போது அந்த நிலப்பரப்புகள் அழிந்து விட்டது. இதனால் பல லட்சம் டன் அளவிலான கார்பண்டை ஆக்ஸைடை ஆக்ஸிஜனாக மாற்றும் தன்மை இதனால் இல்லாமல் போய்விட்டது. ஆகையால் புவி வெப்பமயமாதல் அதிகரிப்பு வேகமாகும். குளோபல் வாமிங் இன்னும் வேகமாக மாற வாய்ப்புகள் அதிகரிக்கும்.

le7ova7

இது இல்லாமல் ஏற்கனவே அமேசன் காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அமெரிக்காவில் இருக்கக்கூடிய மீட் இண்டஸ்ட்ரீ என்று அழைக்கப்படுகிற மாடு வளர்ப்புக்காக அமேசான் காடுகளை அழித்து அதை விவசாய நிலங்களாக மாற்றி, அங்கிருந்து விவசாயம் செய்து தேவையான உணவுகளை அமெரிக்காவுக்கு கொடுக்கிறார்கள். இதைத்தவிற ஈக்கியூடார் என்கிற நாட்டில் ஆயில் நிறுவனம் அமைக்க காடுகளை அழிக்க முற்பட்டனர் அந்த நிறுவனத்தினர். அந்த காடுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் வழக்கு தொடர்ந்து போராடி அதைத்தடுத்தார்கள்.

m3v7pl8

இப்படி தொடர்ந்து தனியார் தொழிற்சாலைகள் அமைப்பதற்காகவும், அங்குள்ள கனிம வளங்களை எடுப்பதற்காகவும் காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் இந்த காட்டுத்தீ என்பது காடுகளை அதிக அளவில் அழிக்கும் வேலையை செய்கிறது. இந்த சம்பவம் இயற்கையாக நடந்த கால நிலை மாற்றமாக இருக்கலாம், அல்லது மனிதனின் செயல்பாடுகள் காரணமாகவும் நடைபெற்று இருக்கலாம். இந்த ஆபத்து, இயற்கை பேரிடர்களை ஏற்படுத்தும், வெயிலின் தன்மை அதிகரிக்கும், குளிரின் தன்மை அதிகரிக்கும், உணவு உற்பத்தியில் பிரச்னை ஏற்படும். தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் இதை சார்ந்து சமூக முரண்களும் அதிகரிக்கும்.

799tj2io

பிரேஸில் நாட்டு அதிபர் வலதுசாரி சிந்தனையாளராக இருக்கிறார். அவர் பொறுப்பேற்கும் போதே இந்த காடுகளில் மாற்றம் கொண்டுவருவோம் என்று கூறியிருந்தார். அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர்களின் உரிமைகள் தொடர்சியாக அங்கு மீறப்பட்டு வருகிறது. இது வெறும் அமேசான் காடும், காடு சார்ந்து வாழும் மக்களின் பிரச்னையாக நாம் அனுக முடியாது. உலக மக்களின் பாதுகாப்பும் இதில் இருக்கிறது என்பதான் அடிப்படை உண்மை. இது தொடர்பாக சூழலியல் கருத்து பரிமாற்றங்களையும் விழிப்புணர்ச்சிகளையும் ஊடகங்கள் உணர்வுபூர்வமாக விவாதிக்க வேண்டும்” என்றார்.

k845s9r

இயற்கை தன்னகத்தே கொண்டுள்ள பேரழகும் பேரமைதியும் நம் வாழ்கையை பசுமை நிறைந்ததாக மாற்றும் வல்லமை கொண்டது. நாம் இயற்கையை பாதுகாக்க முற்படமாட்டோமேயானால் அறிவியலுக்கு அப்பாற்பட்ட பேராபத்துகளை இயற்கையால் கொடுக்க முடியும் என்பதே இது போன்ற நிகழ்வுகள் நமக்கு கற்பிக்கும் பாடம். இயற்கையை பாதுகாப்போம்! இயற்கையை நேசிப்போம்!சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................