This Article is From Aug 27, 2019

Amazon Forest Fires : அமேசான் காட்டுத் தீயை அணைக்க மழை வருமா…? நிபுணர்களின் கருத்து

சாவோ பாலோ பல்கலைக்கழகத்தின் வளிமண்டல அறிவியில் பேராசிரியர் மரியா சில்வா டயஸ் கருத்துப்படி அடுத்த 15 நாட்களில் மழைப்பொழிவு மிகக் குறைவாகவே இருக்கும் என்று கூறினார்.

Amazon Forest Fires : அமேசான் காட்டுத் தீயை அணைக்க மழை வருமா…? நிபுணர்களின் கருத்து

காட்டுத் தீயை அணைக்க 1-2 மணி நேரத்திற்குள் 20மி.மீ மழை பெய்ய வேண்டும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.

BRASILIA:

பிரேசிலில் மழைப்பொழிவுக்கான அறிகுறி பலவீனமாக இருப்பதால் காட்டுதீ அணைவதற்கான வாய்ப்புகள் குறைவு. செப்டம்பர் 10 தேதி வரை மழைப்பொழிவு வாய்ப்புகள் இல்லையென வானிலை தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல மழைக்காடான அமேசான் காட்டுத்தீயினால் பற்றி எரிந்து வருகிறது.

காட்டுத் தீ பிரேசிலுடன் நிற்காது என்றும் அருகிலுள்ள பொலிவியா  பராகுவே  எல்லைப் பகுதியில் 10,000 சதுர கி.மீ  வரை தீ பரவும் என்றும் தெரிய வந்துள்ளது. 

பிரேசில் அரசாங்கம் ஒரு தீயணைப்பு முயற்சியை தொடங்கியுள்ள நிலையில் தீயணைப்பு வாகனங்கள், விமானங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது.  பெரியளவில் நெருப்பினை அணைக்க மழையால் மட்டுமே முடியும். 

அமேசானில் சராசரியாக மழைக்காலம் செப்டம்பர் பிற்பகுதியில் தொடங்கி பரவலாக மழைபொழியத்தொடங்கும். 

சாவோ பாலோ பல்கலைக்கழகத்தின் வளிமண்டல அறிவியில் பேராசிரியர்  மரியா சில்வா டயஸ் கருத்துப்படி அடுத்த 15 நாட்களில்  மழைப்பொழிவு மிகக் குறைவாகவே இருக்கும் என்று கூறினார்.

தொடர்ச்சியான மழைப்பொழிவு அக்டோபரை மாதமே இருக்கும்  காட்டுத் தீயை அணைக்க 1-2 மணி நேரத்திற்குள் 20மி.மீ மழை பெய்யும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார். 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.