உலகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் முதலிடம்!

ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து அமேசான் நிறுவன மதிப்பும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டிள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
உலகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் முதலிடம்!

ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து அமேசான் நிறுவன மதிப்பும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டிள்ளது. கடந்த மாதம் 2ம் தேதி ஆப்பிள் நிறுவனம் இந்த சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து சில வாரங்களில், இரண்டாவதாக அமேசான் நிறுவனமும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளது.

24 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில், வெறும் 400 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு அறையில் ஆரம்பிக்கப்பட்ட அமேசான் நிறுவனம், இன்று உலகின் முன்னனி நிறுவனங்களுள் ஒன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதன் மூலம், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், உலகின் பணக்கார தொழிலதிபர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். தற்போதைய அவரது சொத்து மதிப்பு 166 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கக்கூடும் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது!சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................