அடேங்கப்பா… இத்தனை கோடியா…! அமேசான் நிறுவனர் தன் மனைவிக்கு கொடுத்த ஜீவனாம்சம்

அமேசான் நிறுவனத்தில் 19.7 மில்லியன் டாலர் மதிப்புள்ள 4சதவீத பங்கினை மெக்கன்ஸி பெறுகிறார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை வழங்கி விவகாரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் ஜெஃப்

 Share
EMAIL
PRINT
COMMENTS
அடேங்கப்பா… இத்தனை கோடியா…! அமேசான் நிறுவனர் தன் மனைவிக்கு கொடுத்த  ஜீவனாம்சம்

இருவரும் ஜனவரி மாதம் விவாகரத்து செய்யுள்ளதாக ட்விட்டரில் அறிவித்தனர்


அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவிக்கு 38 பில்லியன் டாலர்  ஜீவனாம்சம்கொடுத்து விவாகரத்து பெற்றுள்ளார்.  உலகமெங்கும் மிகப் பிரபலமான அமேசான் நிறுவனத்தை 1994 ஆம் ஆண்டு தொடங்கியவர் ஜெஃப் பெசோஸ். இவரின் மனைவி மெக்கன்ஸி. 

இருவரும் 25 ஆண்டுகளாக சேர்ந்து வாழந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து செய்யுள்ளதாக ட்விட்டரில் அறிவித்தனர். இதையடுத்து மெக்கன்ஸி தனது பங்குகளை பிரித்துக் கொடுத்து விவாகரத்து பெற்றுள்ளார்.  

அதன்படி அமேசான் நிறுவனத்தில் 19.7 மில்லியன் டாலர் மதிப்புள்ள  4சதவீத பங்கினை மெக்கன்ஸி பெறுகிறார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை வழங்கி விவகாரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்  ஜெஃப். 

மேலும் வாஷிங்டன் போஸ்ட், விண்வெளி ஆய்வு நிறுவனமான புளூ ஆரிஜின் ஆகிய நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளை கணவர் ஜெஃப்க்க்கு விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளார் மெக்கன்ஸி. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................