Ayodhya Verdict : உ.பி, டெல்லி, கர்நாடக மற்றும் பிற மாநிலங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அனைத்து அரசு பள்ளிகளும் சனிக்கிழமை மூடப்படும் என்று ட்விட் செய்துள்ளார். விடுப்பு அறிவிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Centre issued alert to all states, union territories about posting adequate security at sensitive places.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. வதந்திகளை நம்ப வேண்டாம், அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்
  2. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
  3. உ.பி, டெல்லி, ம.பி ஜம்மு மற்றும் கர்நாடகவில் பள்ளிகளுக்கு விடுமுறை

அயோத்தி தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் உத்தர பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், ஜம்மு மற்றும் கர்நாடகவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சனிக்கிழமை முதல் திங்கள் வரை மூடப்படும் என்று மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம், அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

“ மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கும் அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மாநில நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது என்று முதல்வர் கூறியுள்ளார்.சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உ.பி  அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அனைத்து அரசு பள்ளிகளும் சனிக்கிழமை மூடப்படும் என்று ட்விட் செய்துள்ளார். விடுப்பு அறிவிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தினார்



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................