பனி மூட்டம் காரணமாக டெல்லியில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

வட இந்தியாவின் பல மாநிலங்களில் பனி மூட்டம் காணப்படுகிறது.

பனி மூட்டம் காரணமாக டெல்லியில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

முன்னெச்சரிக்கையாக விமானங்கள் தாமதமாக இயங்குகின்றன.

New Delhi:

பனி மூட்டம் காரணமாக டெல்லியில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அளவுக்கு அதிகமான பனி மூட்டத்தால் விமானங்கள் போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விமானங்கள் புறப்படுவது சுமார் 1 மணி நேரத்திற்கு தாமதப்படுத்தப்பட்டுள்ளது. விமானங்கள் இயக்கப்படுவதற்கு குறைந்த 125 மீட்டர் அளவுக்கு வெளிச்சம் தேவை. இந்த பனி மூட்டம் டெல்லிக்கு வரும் விமானங்களை பாதிக்கவில்லை. வந்திறங்கும் விமானங்களின் பைலட்டுகளுக்கு 50 மீட்டர் வெளிச்சம் இருந்தால் போதுமானது.

டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று காலை முதல் பனி மூட்டம் காணப்படுகிறது.

Newsbeep

நேற்று அரியானா மாநிலத்தில் பனி மூட்டம் காரணமாக 50 வாகனங்கள் ஒன்றுக் கொன்று மோதின. இதில் பெண்கள் 7 பேர் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.